சினிமாவில் பெண்களை இழிவுபடுத்தும் பாடல் வரிகள்.. பெண் போலீஸ் அதிகாரிகள் கண்டனம்
திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் பாடல் வரிகள், உரையாடல்கள் இடம்பெறுவதற்கு பெண் போலீஸ் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவை: சமீபகாலமாக பெண்கள் இழிவுபடுத்தப்படுவதற்கு திரைப்படங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றது என்று தமிழகத்தை சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சமீபகாலமாக திரைப்படங்களில் பெண்களை இழுபடுத்தும் காட்சிகள், வசனங்கள் அதிக அளவில் இடம்பெற்று வருவதாக பெண்கள் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த 3 பெண் போலீஸ் அதிகாரிகள் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கோவை டி.சி.பி லட்சுமி ஐ.பி.எஸ். கூறுகையில், இந்தியாவில் பெண்களை போற்றி பெருமையாக பார்க்கின்றது நம்முடைய நாடு. அதனால்தான் நதிகளுக்கு கூட பெண்களின் பெயர்களை வைத்துள்ளோம். ஆனால் தற்போது பெரியார் கூறியது போல், பெண் போகப் பொருளாகவும் திருமணத்திற்கு நகை வாங்க பயன்படுத்தும் பொருளாக பலர் கருதுகின்றனர். அப்படி இருப்பதனால் பெண்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சினிமா என்று தான் கூறவேண்டும்.
இளைஞர்கள் மத்தியில் பெண்கள் தொடர்பான அவதூறுகளை சினிமா மூலமாக பரப்புகின்றனர். பெண்களை இழுவுபடுத்தும் பாடல்கள், வன்முறையை தூண்டும் வகையிலான பாடல்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்றன. பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலும் தாய், மனைவி, மகள், சகோதரி உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள் என்பதை நினைத்து எழுத வேண்டும். அவர்கள் தங்கள் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் 12 குற்றச்சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வருகிறது. இழிவான பாடல்கள், வசனங்கள் தான் முக்கிய காரணம். இதற்கு சினிமாவின் பங்கு தான் அதிகம் என்கிறார் கோவை எஸ்.பி., ரம்யா பாரதி.
டி.எஸ்.பி., திஷா மிட்டல் கூறுகையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பாடல் வரிகள், திரைப்படங்களில் வரும் உரையாடல்கள் எல்லாம் பெண்களுக்கு எதிராகவே உள்ளது. இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார்.
இவர்கள் மூன்று பேரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் படங்களில் ரொமான்ஸ் என்ற பெயரில் பெண்களை இழுவுபடுத்தும் வசனங்கள், உரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications