எய்ம்ஸ் மாணவர் சரவணன் மர்ம மரணம்... சிபிஐ விசாரணைக்கு வைகோ, வாசன் வலியுறுத்தல்

சென்னை: எய்ம்ஸ் மாணவர் டெல்லியில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதால் அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனும் வலியுறுத்தியுள்ளனர்.

எய்ம்ஸ் மாணவரான திருப்பூரைச் சேர்ந்த சரவணன் கடந்த ஜுலை 9ம் தேதி அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை தற்கொலை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது தந்தை கணேசன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Vaiko, Vasan seek CBI probe in AIIMS student murder
இந்நிலையில், சரவணனின் பிரேத பரிசோதனை அறிக்கை அண்மையில் வெளியானது. இந்த அறிக்கையில் சரவணன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வலது மணிக்கட்டில் விஷ ஊசி போடப்பட்ட தடயங்கள் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சரவணனின் மரணத்தில் மர்மம் நீடித்து வருவதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உண்மையான கொலையாளிகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதே போன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Vaiko, Vasan seek CBI probe in AIIMS student murder

இதே கோரிக்கை வலியுறுத்தி சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English summary
MDMK Chief Secretary Vaiko, TMC leader Vasan demanded CBI probe in AIIMS student Saravanan suicide case.
Please Wait while comments are loading...

Videos