விசிக வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி மாற்றம்...வானூரில் ரவிக்குமார் போட்டி !
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று மானாமதுரை, வானூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் தனது வேட்பாளர்களை மாற்றியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலரான எழுத்தாளர் ரவிக்குமார் வானூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் 25 வேட்பாளர்களின் பட்டியலை இரண்டு கட்டங்களாக திருமாவளவன் வெளியிட்டார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று 2 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை மாற்றியுள்ளது.
இதுகுறித்து கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மானாமதுரை சட்டசபை தொகுதியில் கு.கா.பாவலன் போட்டியிடுவார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சிவகங்கை மாவட்ட தெற்கு மாவட்டச் செயலாளரான தீபா என்கிற திருமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வானூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ம.தமிழ்செல்வன் மாற்றப்பட்டு கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு!












Click it and Unblock the Notifications