ஜெயலலிதா உடல் நலம் பெற மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று பணிகளை தொடர வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ராஜாஜி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், மகாத்மா காந்தி வரலாற்று புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெங்கையா நாயுடு, முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று பணிகளை தொடர வேண்டும் என வாழ்த்தினார். மேலும், 1916-ம் ஆண்டு பனாரசில் மகாத்மா காந்தி தூய்மை குறித்து உரையாற்றினார் என்றும், எனவே, அவர் பிறந்த நாளில் அனைவரும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications