கூட்டணியில் இருப்பதாக கூறுபவர்கள் கூறிக் கொண்டே இருக்கட்டும்- பாஜகவுக்கு விஜயகாந்த் 'பொளேர்' பதில்
சென்னை: நாங்கள் கூட்டணியில் நீடிக்கிறோம் என கூறுபவர்கள் கூறிக் கொண்டே இருக்கட்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் அக்கட்சிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால் விஜயகாந்த், இந்த கருத்தை தொடர்ந்து நிராகரித்து வருகிறார்.

விடாப்பிடியாக தேமுதிக எங்களுடன் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் பா.ஜ.க. கூறி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:
நாங்கள் கூட்டணியில் இருப்பதாக கூறுபவர்கள் கூறிக் கொண்டே இருக்கட்டும். எங்களைப் பொறுத்தவரையில் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பதற்கு இன்னமும் காலம் இருக்கிறது.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். கூட்டணி தொடர்பாக நேரம் வரும் போது அறிவிப்பேன்.
2016ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக நிச்சயம் ஆட்சியைப் பிடிக்காது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுகவின் 37 எம்.பி.க்கள் என்னதான் செய்து கொண்டிருந்தார்கள்?
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications