பிக் எஃப் எம் ரேடியோ ஜாக்கியானார் விஜய் டிவி ரம்யா
சென்னை: பிரபலமான சின்னத்திரை தொகுப்பாளினியும் நடிகையுமான ரம்யா தற்போது ரேடியோ ஜாக்கியாக களமிறங்கியுள்ளார். பிக் பிப்டி பிப்டி என்ற நிகழ்ச்சியை நேரடியாக நடத்தும் அவர் வாசகர்களுடன் உரையாடுகிறார்.
விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா?, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் ரம்யா. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்திலும் நடித்திருந்தார்.
VJ to RJ avatar !!Everyday 4-6pm on my show BIG 50-50 @927BIGFM what's app 9025927927 or call 39890927 2 talk with me pic.twitter.com/Kgivptksdz
— Ramya Subramanian (@ramyavj) August 24, 2015 திருமணத்திற்குப் பின்னர் ரம்யா சினிமாவில் நடிக்க வந்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் திடீரென பிக் எஃப் எம் நிகழ்ச்சியின் ரேடியோ ஜாக்கியாக களமிறங்கிவிட்டார். தினசரி மாலை 4 மணி முதல் 6 மணிவரை ரம்யா உடன் உரையாடலாம்.
எனக்கு இது புதிய அனுபவம்... கொஞ்ச நாளைக்கு தப்பும் தவறுமாகத்தான் இருக்கும். பொறுத்துக்கொள்ளுங்கள், என்னுடன் பேசுங்கள் மகிழ்ந்திருங்கள் என்று தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார் ரம்யா.
எத்தனையோ ரேடியோ ஜாக்கிகள், வீடியோ ஜாக்கிகளாக வலம் வருகின்றனர். டிவி சீரியல்களில் நடிக்கின்றனர். ஆனால் பிரபல வீடியோ ஜாக்கியாகவும், நடிகையாகவும், சினிமா நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்த ரம்யா திடீரென ரேடியோ ஜாக்கியாக மாறியதன் காரணம் என்னவென்று புரியமல் தவிக்கின்றனர் அவரது அபிமானிகள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications