Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏழை பாழை மட்டுமல்ல, மிடில் கிளாஸுக்கும் பெருத்த சேதம்... அரசு கொடுக்கும் ரு. 5000, 10,000 போதுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கமாக சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் பெரும்பாலும் குடிசைவாசிகள்தான் பெரும் பாதிப்பை சந்திப்பார்கள். ஆனால் இந்த முறை நடுத்தர வர்க்கத்தினரும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஆனால் அரசு அறிவித்துள்ள நிவாரண உதவி இவர்களுக்கு எந்த அளவுக்கு உதவப் போகிறது என்று தெரியவில்லை.

ஏரிகள் நிரம்பியது, திறந்து விடப்பட்ட ஏரிகளிலிருந்து பெருக்கெடுத்து வந்த வெள்ள நீர், அதனால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஆகியவை காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது சென்னை.

இந்த பாதிப்பிலிருந்து மீளுவது எப்படி என்று தெரியாமல் மக்கள் விழி பி்துங்கிப் போயுள்ளனர். வசதி படைத்தோரைக் கூட இந்த மழை வெள்ளம் நிலை குலைய வைத்துள்ளது என்பதே உண்மை.

வழக்கமாக நடப்பது என்னவென்றால்

வழக்கமாக நடப்பது என்னவென்றால்

வழக்கமாக அடையாறு, கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அந்தப் பகுதியையொட்டி ஆற்றங்கரையோரமாக வசிக்கும் குடிசைவாசிகள்தான் பெரும் பாதிப்பை சந்திப்பார்கள். குடிசைகள் நீரில் மூழ்கும், பொருட்கள் பறிபோகும்.

குறைந்தபட்ச நிவாரணம்

குறைந்தபட்ச நிவாரணம்

இதுபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு கடந்த காலங்களில் ரூ. 1,000 முதல் ரூ. 2,000 பணம், இலவச வேட்டி, சேலை, அரிசி, கெரசின் போன்றவை தரப்பட்டு வந்தன. இரண்டு நாட்களுக்கு நிவாரண முகாமில் வைத்து சாப்பாடு போட்டுவிட்டு அத்தோடு அந்த நிவாரண உதவிகள் முடிந்து போகும்.

ஆனால் இப்போது நிலைமை என்ன

ஆனால் இப்போது நிலைமை என்ன

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிப் போயுள்ளது. ஆற்றங்கரையோர குடிசைவாசிகள் மட்டுமல்லாமல் நகரிலும் புறநகர்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சேதத்தின் மதிப்பு சுமார் 1 லட்சம் கோடியை எட்டும் என்று தெரிகிறது.

நடுத்தர வர்க்கத்தினருக்கும் பாதிப்பு

நடுத்தர வர்க்கத்தினருக்கும் பாதிப்பு

குடிசைவாசிகள் முற்றிலுமாக தங்களது் வாழ்வாதாரத்தையம், சேமிப்புகளையும், உடமைகளையும் இழந்து நிற்கிறார்கள் என்றால் நடுத்தர வர்க்கத்தினரும் அதேபோன்ற இழப்பை சந்தித்துள்ளனர்.

தரைத்தள வீடுகள் காலி

தரைத்தள வீடுகள் காலி

இந்த பெரு வெள்ளத்தில் சிக்கிப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளவர்கள் தரைத் தளத்தில் வசித்து வந்தோர்தான். பல பகுதிகளில் தரைத்தள வீடுகள் பெரும்பாலும் முழுமைாயக மூழ்கிப் போயுள்ளன.

எல்லாப் பொருளும் போச்சு

எல்லாப் பொருளும் போச்சு

தரைத்தளத்தில் உள்ள வீடுகளில் உள்ள பெரும்பாலான பொருட்கள் நீரில் மூழ்கிப் போய் விட்டன. பீரோ, ஃபிரிட்ஜ், கார், டிவி, நகை நட்டுகள், துணிமணிகள், கட்டில், சோபா, சமையல் பாத்திரங்கள், கேஸ் சிலிண்டர்கள், வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட அத்தனையும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

லட்சக்கணக்கில் சேதம்

லட்சக்கணக்கில் சேதம்

பெரும்பாலான குடும்பங்களில் குறைந்தது ரூ. 1 லட்சம் முதல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சேதத்திலிருந்து அவர்கள் மீள்வது மிகக் கடினம். பெரும்பாலானவர்கள் மாதச் சம்பளம் வாங்குவோர் என்பதால் இந்த திடீர் சுமையை அவர்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடன்களின் அழுத்தம்

கடன்களின் அழுத்தம்

இப்படிப்பட்ட சேதத்தை சந்தித்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன் என பலவிதமான கடன் சுமைகளில் சிக்கித் தவிப்பவர்கள். இப்போது இந்த கூடுதல் சுமை அவர்களை நிலை குலைய வைத்துள்ளது.

ஒரு வருடத்திற்கு தள்ளுபடி செய்யலாம்

ஒரு வருடத்திற்கு தள்ளுபடி செய்யலாம்

வீட்டுக் கடன் செலுத்தி வருபவர்களுக்கு ஒரு வருடம் வரை தவணை கட்டுவதற்கு விதிவிலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். இது ஓரளவுக்கு அவர்களுக்கு உதவும்.

கட்டுமானப் பொருட்களின் விலையைக் குறைக்கலாம்

கட்டுமானப் பொருட்களின் விலையைக் குறைக்கலாம்

மேலும் பலரது வீடுகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. பலருக்கு வீடுகள் இடிந்துள்ளன. இதுபோன்ற கட்டுமானத் தேவைகளுக்கு மட்டும் பல்லாயிரம் டன் அளவுக்கு செங்கல், ஜல்லி, சிமென்ட் ஆகியவை தேவைப்படும். இதை மானிய விலையில் தர அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

5000, 10000 போதாது

5000, 10000 போதாது

இப்படி பல லட்சம் அளவிலான சேதத்தை சந்தித்துள்ள மக்களுக்கு அரசு அறிவிதுள்ள ரூ. 5000, ரூ. 10000 நிவாரண நிதி எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை. அதிகபட்சம் இதை வைத்து ஒரே ஒரு டூவீலரைத்தான் பழுது பார்க்க முடியும்.

மாநில அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+