இன்று உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்.. செம்மஞ்சேரியில் விழிப்புணர்வுப் பேரணி
- ராகவேந்திரா ஜெகன்னாதன்
சென்னை: இன்று ஜூன் 12, உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம். இதையொட்டி AWARE அமைப்பின் சார்பில் சென்னை செம்மஞ்சேரி பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
சக குழந்தைகள் புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது, சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். இந்த அவலம் இன்றும் உலகளவில் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றது
உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

விழிப்புணர்வு
பள்ளிக்கூடம்தான் கட்ட முடியலை, குறைந்தது கல்வியின் அவசியத்தையும் விழிப்புணர்வையும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கிய அமைப்புதான் எங்கள் AWARE.

இலவச வகுப்புகள்
வெறும் விழிப்புணர்வு மட்டும் செய்தால் போதாது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு பயனுள்ள செயலையும் செய்து வருகிறோம். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் இலவச வகுப்புகளையும் எடுத்து பல்வேறு போட்டிகளையும் நடத்தி வருகிறோம்.

போட்டிகள்
போட்டியின் முடிவுகளை பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்களுடன் கலந்துரையாடலும் செய்கிறோம். இதனால் குழந்தைகளுக்கு கல்வியின்மேல் அதிக ஆர்வம் வரும் என்பதில் ஐயமில்லை.

சிறப்புத் திட்டங்கள் தேவை
அனைத்து குழந்தைகளும் கல்வியறிவு பெறுவதை ஒவ்வொரு அரசும் உறுதி செய்ய வேண்டும். சில குழந்தைகள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்கின்றனர். முதலில் இக் குழந்தைகளின் பெற்றோர்களின் வருமானத்துக்கு அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும்.

விழிப்புணர்வு பேரணி
இன்று உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி நேற்று சிறுவர் மகிழ் செம்மஞ்சேரி என்ற தலைப்பில் ஒரு நடை பயணம் மற்றும் நடனத்துடன் கூடிய விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளப்பட்டது. இதில் தன்னார்வலர்களும், செம்மஞ்சேரி பகுதி குழந்தைகளும் கலந்து கொண்டனர். செம்மஞ்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தர் இதை நிறைவு செய்தார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications