சென்னை போலீசை அதிர வைத்த 'மின்னல் வேக' போராட்டம்!
மிகவும் பரபரப்பான கிண்டி கத்திபாரா பாலத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தியதன் மூலம் போலீஸாரை அதிர வைத்துள்ளனர் இளைஞர்கள்.
சென்னை: சென்னை கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்திதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலும், மின்னல் வேகத்தில் கூடி போலீஸாரையே திகைப்பில் ஆழ்த்தி விட்டனர் இளைஞர்கள்.
வறட்சி நிவாரணம் அதிகரித்து வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என டெல்லியில் தமிழக விவசாயிகள் ஒரு மாதமாக போராடி வருகின்றனர்.
எனினும் மத்திய அரசு அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சமாதான பேச்சுவார்த்தைக்கும் அவர்கள் உடன்படவில்லை.

பரபரப்பான பாலம்
சென்னையின் முக்கிய மேம்பாலம் கிண்டி கத்திபாரா மேம்பாலம் ஆகும். இவ்வழியாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், போரூர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பாலம் ஆகும். இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பணி நிமித்தமாகவும், பள்ளி,கல்லூரிகளுக்கு, புறநகர் பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.

பீக் ஹவர்
காலை 8 மணி முதலே இந்த பாலத்தில் வாகனங்கள் நெரிசலான நிலையிலேயே சென்று வரும். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் காலை முதலே தங்கள் பயணத்தை தொடங்கினால்தான் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறித்த நேரத்திற்கு பணிக்கோ, பள்ளி, கல்லூரிகளோ செல்ல முடியும்.

பூட்டு போட்டு போராட்டம்
கத்திபாரா மேம்பாலத்துக்கு இன்று காலை இளைஞர், மாணவர் அமைப்பினர் திரண்டனர். பின்னர் பாலத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதனால் இருமருங்கிலும் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர் போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. பின்பு போலீஸாரே வலுக்கட்டாயமாக சங்கிலியை உடைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

மின்னல் வேகம்
மெரினாவில் போராட்டம் நடத்த சமூக வலைதளங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அறிந்த போலீஸார் அங்கு குவிந்த மாணவர்களை போராட்டம் நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் மிகவும் ஜாக்கிரதையாக மாணவர்களும், இளைஞர்களும் மின்னல் வேகத்தில் குவிந்து இங்கு பெரும் போராட்டத்தை நடத்தி மிரட்டி விட்டனர்.

போலீஸார் திகைப்பு
என்னதான் விவசாயிகளுக்கான போராட்டம் என்றாலும் இதனால் பாதிக்கப்பட்டது அப்பாவி பொதுமக்கள் என்பதை போராட்டக்காரர்கள் மறந்து விடக் கூடாது. அதேசமயம் திடீரென நடந்து முடிந்த இந்தப் போராட்டத்தால் சென்னை போலிஸாரின் செயல் திறன் கேலிக்குரியதாக மாறி விட்டது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications