தமிழில் நடித்த அனைத்து படங்களும் தோல்வி.. இருந்தும் மவுசு குறையாத விஜய் பட நடிகை.. யார்?
நடிகர், நடிகைகளை பொறுத்தவரை அவ்வப்போது ஹாட் படங்கள் கொடுத்தால் மட்டுமே அவர்களின் சினிமா மார்க்கெட் ஏறுமுகமாக இருக்கும். ஆனால் இங்கு ஒரு நடிகை தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்தும் மவுசு குறையாமல் இருந்து வருகிறார். வாங்க யார் அந்த நடிகைன்னு பார்ப்போம்.
மாடல் அழகியாக சோசியல் மீடியாக்களில் வைரலாக வலம் வந்தவர் பூஜா ஹெக்டே. பின்னர் 2010 மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் 'முகமூடி'. அப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தனது திரை பயணத்தை தொடங்கினார். நடிகரோ, நடிகையோ முதல் படம் ஹிட்டாவது அவரவர் லக் பொறுத்தது என்றே சொல்லலாம். ஆனால் அந்த லக் பூஜாவுக்கு இல்லை.. முதல் படம் பிளாப் ஆனது.
முதல் படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வராததால் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் ஹிந்தி சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் குறுகிய காலத்தில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் செம பிஸியாக இருந்து வந்த பூஜா, விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்தார். நீண்ட இடைவெளிக்கு பின் என்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இருப்பினும் படம் மோசமான விமர்சனத்தை பெற்றது.
மீண்டும் தமிழுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக இருந்து வந்த பூஜா, கடந்தாண்டு சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அப்படமும் கலவையான விமர்சனத்தை பெற்றது. பின்னர் 'கூலி' படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
தமிழ் உட்பட வெவ்வேறு மொழிகளில் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த 7 படங்களும் தோல்வியடைந்தது. இருப்பினும் அணைத்து மொழிகளிலும் மவுசு குறையாமல் ஜொலித்து வருகிறார், பூஜா. தமிழில் ஹிட் படம் கொடுத்திடாத பூஜா, விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் நாயகியக நடித்துள்ளார். அப்படமும் பொங்கல் ரிலீஸுக்கு திண்டாடி வருகிறது.
ஜனநாயகன் உட்பட ஹிந்தியில் 'ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை', தமிழில் காஞ்சனா 4 மற்றும் தெலுங்கில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு படம் என மொத்தம் 4 படங்கள் ரிலீஸாகவுள்ளன. இதில், ஜனநாயகன் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் சென்சார் சான்றுதலுக்காக வைட்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications