சென்னை: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இன்வெஸ்ட்மெண்ட் ஆபிசர், ரிலேஷன்ஷிப் மேனேஜர் டீம் லீடு உள்பட மொத்தம் 207 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. எஸ்பிஐ வங்கியில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். நாடு முழுக்க பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது. சமீபத்தில் கிளர்க் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை எஸ்பிஐ வங்கி வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை கடந்த மாதம் வெளியிட்டது. மொத்தம் 206 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம். ரிலேஷன்ஷிப் மேனேஜர் டீம் லீடு - 24, இன்வெஸ்ட்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் - 09, மண்டல தலைவர் (ரீடெயில்) - 01, பிராந்திய தலைவர் - 05, இன்வெஸ்ட்மெண்ட் ஆபிசர் - 04, விபி வெல்த் - 91, ஏவிபி வெல்த - 73 என மொத்தம் 207 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித்தகுதியை பொறுத்தவரை பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் முடித்தவர்கள், முதுகலை பட்டம் / பிஜி டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மண்டல தலைவர் பணிக்கு என எடுத்துக்கொண்டால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து பட்டம் முடித்து இருக்க வேண்டும். ஏம்பிஏ (வங்கி, நிதி, மார்க்கெட்டிங்) 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்தபட்சம் வங்கி துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றியிருப்பது அவசியம். ஏவிபி வெல்த் பணியை எடுத்துக்கொண்டால், குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். ஃபைனான்ஸ், மார்க்கெட்டிங், வங்கி உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கொண்ட முதுகலை பட்டம் முடித்து இருந்தால் கூடுதல் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் 3 ஆண்டுகள் பணி அனுபவமும் கோரப்பட்டுள்ளது. வயது வரம்பை பொறுத்தவரை 28 வயது நிரம்பியவர்கள் முதல் 50 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும். மண்டல தலைவர், பிராந்திய தலைவர் பதவிக்கு 35 வயது முதல் 50 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ரிலேஷன்ஷிப் மேனேஜர் டீம் லீடு, இன்வெஸ்ட்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு 28 முதல் 42 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்வெஸ்ட்மெண்ட் ஆபிசர் பதவிக்கு 28-40 வயது வரை உடையவர்களும், விபி வெல்த் பணிக்கு 26- 42 வயது வரை உடையவர்களும், ஏவிபி வெல்த பணிக்கு 23 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்னப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடவும். அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை படிக்க: https://recruitment.sbi.bank.in/crpd-sco-2026-27-23/applyபணியிடங்கள் விவரம்:
கல்வித் தகுதி:
வயது வரம்பு:
தேர்வு முறை எப்படி?
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்