தவெக ஆட்சியை கவிழ்க்க பல கட்சிகள் முயற்சி! எதுவாக இருந்தாலும் சிஎம் விஜய் முறியடிப்பார்! ஷாஜகான் நச்
சென்னை: தேர்தல் முடிந்து மே 4 முதல் பல்வேறு பேரம் நடத்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
தவெக ஆட்சி அமைந்த பின் சில பல கட்சிகள் சேர்ந்து கொண்டு இன்றளவும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடக்கிறது எனவும், நம்பிக்கை இல்லா தீர்மானம் இல்லை.. ஆட்சிக்கு எதிராக எந்த நடவடிக்கைகள் யார் எடுத்தாலும் முதல்வர் அதனை முறியடிப்பார் என அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.
நெல்லையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," தவெக தலைமையில் சமூக நீதி வெற்றிக்கூட்டணி தலைமையில் அரசு அமைந்து 6 மாதமாகிறது.

6 மாதத்தில் பல நல்ல திட்டங்களை அறிவித்து தமிழக முதல்வர் உத்தரவின் படி சிறுபான்மை மக்களை நேரடியாக சந்தித்து வருகிறோம். நெல்லை மாநகர பகுதிகள் மக்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணபட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு நிதி நிலை அறிக்கையில் அறிவித்த கபர்கஸ்தான், கல்லறை தோட்டம் அமைக்க 34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஷாஜகான்
சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்பது மிக முக்கியம். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 9000 கொலைகள் நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் நடந்த கவலைக்குறிய செயல் இனியும் நடக்க கூடாது என முதல்வர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். கொலைகள் வேதனை அளிக்கிறது. தவெக அரசு பொறுப்பேற்று 6 மாதம் முடிந்து உள்ளது. இது தேனிலவு காலம் கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இதற்கு போதை பழக்கம் ஒரு மிக முக்கிய இடத்தில் உள்ளது.
தவெக ஆட்சி
பூரண மதுவிலக்கு என்பது ஐ.யூஎம்எல் கொள்கை. மதுக்கடைகளை மூடிவிட்டு மீண்டும் திறக்கப்பட்டது தான் இப்போது இருக்கும் நிலைக்கு காரணம். மது போதை பழக்கத்தை தடுக்க வேண்டும் என்றால் கால அவகாசம் தேவை. இந்தியா முழுதும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தேவை. தமிழகத்தில் இதனை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது கொலைச்சம்பவம் நேற்று மட்டும் நடந்ததாக எதிர்கட்சி சொல்கிறது. முதல்வர் அதனை தடுக்கத்தான் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது இதுவரை புகார் இல்லை. சமூகவலைதளத்தில் வைத்து தான் இது போன்ற சம்பவம் பேசப்படுகிறது. அவர் மீது தவறு இருந்தால் அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
துறையூர் எம்.எல் ஏ விவகாரம் தொடர்பாக பரவும் வீடியோ வேண்டும் என்றே பரப்பபடுகிறதா என பார்க்க வேண்டும். பெரியார் நூலகத்தில் உள்ள நூல் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல பதிப்பகம் உண்மைக்கு மாறான தகவல்களை வைத்து புத்தகம் வெளியிடபட்டுள்ளது
லஞ்ச ஒழிப்பு துறை
கடந்த ஆட்சியில் இது போன்ற புத்தகங்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அனைத்து நூலகங்களிலும் ஆய்வு நடத்த உத்தரவிடபட்டுள்ளது. திறந்த மற்றும் திறக்கப்பட உள்ள நூலகங்கள் என அனைத்து நூலகங்களிலும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வரலாற்றை திரிக்க இது போன்ற செயல் நடந்ததா இல்லை ஊழல் நோக்கில் இந்த செயல் நடந்ததா என்ற விசாரணை நடத்த வேண்டும்
இஸ்லாமியர்கள்
மதம் மாறிய இஸ்லாமிய மக்களின் வாழ்வாதாரம் குறித்து ஆய்வு செய்ய அணையம் அமைக்கப்பட்டுள்ளது. மதமாறிய இஸ்லாமியர்கள் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிருஸ்தவராக மதம் மாறிய தலித் மக்களின் சான்றிதழ் தொடர்பாகவும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து மே 4 முதல் பல்வேறு பேரம் நடத்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
தவெக ஆட்சி அமைந்த பின் சில பல கட்சிகள் சேர்ந்து கொண்டு இன்றளவும் முயற்சி நடக்கிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் இல்லை ஆட்சிக்கு எதிராக எந்த நடவடிக்கைகள் யார் எடுத்தாலும் முதல்வர் அதனை முறியடிப்பார். நாளை எம்.எல்.ஏ கூட்டம் ஒன்று எதற்கு என்பது தெரியவில்லை. ஆட்சி 6 மாத காலம் முடிந்துள்ள நிலையில் சிறப்பாக செயல்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க அமைச்சரவை கூட்டத்தில் அறிவுறை வழங்கப்பட்டது. அதனை போலவே எல்.எல் ஏக்களுக்கு அறிவுறை வழங்கப்படலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications
