5 பிரிவில் வழக்கு.. கைதான கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை என்ன?

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: மாவட்ட பெண் கலெக்டரான ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது மொத்தம் 5 பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு எத்தனை ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்?

கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ். இவர் மாவட்ட கலெக்டராக இருக்கும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பினார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவில் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

TVK MLA Arul Vigenesh

கடந்த 2 நாட்களாக சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் போலீஸ் விசாரித்து வந்தது. இந்நிலையில் தான் இன்று மாலை சுமார் 6.15 மணிக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவரை போலீசார் வீட்டில் இருந்து கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்துக்கு காவல் வாகனத்தில் அழைத்து செல்கின்றனர். கைதான தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது மொத்தம் 5 பிரிவுகளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி பிஎன்எஸ் பிரிவு 75 (பாலியல் தொல்லை), பிஎன்எஸ் 78 (பின்தொடர்தல்), பிஎன்எஸ் 79 (பெண்ணை மானபங்கப்படுத்தி அவமதிக்கும் வகையில் வார்த்தை, சைகையை பயன்படுத்துதல்), பிஎன்எஸ் 294 (ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புதல்), தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு - 4(1), அரசு பெண் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்க்கு தண்டனை நிரூபிக்கப்பட்டால் சுமார் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, எம்எல்ஏவாக இருப்பவர் கைது செய்யப்பட்டதாலேயே, அவருடைய பதவி பறிபோகாது. ஆனால் குறிப்பிட்ட வழக்கில் 2 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தால் அவருடைய பதவி பறிக்கப்படும்.

தற்போதைய கைது நடவடிக்கையால் அருள் விக்னேஷ் பதவி இழக்க வாய்ப்பு இல்லைதான். ஆனால் அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அவரது பதவி தானாகவே காலியாகிவிடும். ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுக்க முடியாது என அடிக்கடி பேசி வரும் முதல்வர் விஜய், அதுவரை காத்திருப்பாரா, அல்லது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வைத்து பெண்களுக்கு தன்னம்பிக்கையூட்டுவாரா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+