பல்சர் பைக் என்ஜினுக்குள் சாரைப்பாம்பு.. எங்கே இருந்தது தெரியுமா? அல்லோலகல்லோலப்பட்ட கிருஷ்ணகிரி

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் பைக்கிற்குள் சாரைப்பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பைக்கின் எந் பகுதியில் பாம்பு மறைந்திருக்கிறது என்று தெரியாமல் வனத்துறையினர் நீண்ட நேரம் திணறிவிட்டார்கள்.. கடைசியில் அந்த பாம்பு எங்கே இருந்தது தெரியுமா? இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது

பொதுவாக மழைக்காலம் என்றாலே பாம்புகள் நடமாட்டம் அதிகமாகி விடும்.. காரணம், வசித்து வரும் பொந்துகள், புதர்கள், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கிவிடும் என்பதால், அங்கு இருக்க முடியாமல் பாதுகாப்பான இடங்களைத் தேடி பாம்புகள் வெளியே வருகின்றன. அப்போது வீடுகள், கடைகள், வாகனங்கள் என மறைவான இடங்களுக்குள் புகுந்துவிடுகின்றன.

Krishnagiri Snake Rescue

மழைக்காலம் - பாம்புகள்

குறிப்பாக வீட்டை சுற்றி புதர்கள், குப்பைகள், விறகுகள் குவிந்து கிடந்தால் பாம்புகள் அங்கு தங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எலிகளை தேடியும் பாம்புகள் வீடுகளுக்குள் வரலாம். அதனால்தான், மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது கூடுதல் அவசியமாகிறது.

அதேபோல இரவு நேரங்களில் வெளியில் செல்லும்போது வெளிச்சத்தை பயன்படுத்துவதுடன், செருப்பு, ஷூக்கள் அணிவதற்கு முன்பும் கவனமாக இருக்க வேண்டும்.

புதுச்சேரியில் 6 அடி நல்ல பாம்பு

2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அங்கு ஸ்டாலின் என்பவரது வீட்டில் செப்டிக் டேங்க் அமைக்கும் பணி நடந்து வந்தது. அப்போது மாலை 5.30 மணியளவில் செப்டிக் டேங்க் சிமென்ட் உரைக்குள் நல்ல பாம்பு ஒன்று இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் ஊழியர்கள் யாருமே வரவில்லையாம்.

அதனால், பாம்பு பிடி வீரர் விநாயகத்துக்கு தகவல் கொடுத்தார். இரவு 7.30 மணிக்கு வந்த விநாயகம், 6 அடி நீள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்து எடுத்து சென்றார்.. அதற்கு பிறகே ஸ்டாலின் வீட்டில் நிம்மதியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி பல்சர் பைக்

இதோ இன்று கிருஷ்ணகிரியிலும் ஒரு பாம்பு, மொத்த பேரையும் வெலவெலக்க வைத்து விட்டது.. கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் பைக்குக்குள் சாரைப்பாம்பு ஒன்று புகுந்து விட்டது.. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த வனத்துறையினர் பாம்பை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

ஆனால் பாம்பு பைக்கின் உட்பகுதியில் எங்கோ மறைந்திருந்ததால், அதை அப்படியே வெளியே எடுக்க முடியவில்லை.. இதனால் செய்வதறியாமல் திகைத்த வனத்துறையினர், பிறகு பல்சர் பைக்கின் பாகங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி வெளியே எடுத்து, பாம்பு இருக்கும் இடத்தைத் தேடினர். இந்த மீட்புப் பணிக்கே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகிவிட்டதாம்..

பைக் என்ஜின் & சக்கரம்

முதலில் வாகனத்தின் முன்பக்க சக்கரப் பகுதி மற்றும் டேங்க் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.. ஆனால், பாம்பு அங்கு இல்லை.. அதனால் பின்பக்க செயின், எஞ்சின் இடுக்குகளில் பாம்பு பதுங்கியிருக்கிறதா என வனத்துறையினர் உன்னிப்பாக பார்த்தனர். எஞ்சின் மற்றும் சக்கரப் பகுதிகளுக்கு நடுவில் பதுங்கியிருந்த சாரைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து மீட்டனர்.

சிறிய இடுக்கு என்பதால், அதில் சிக்கி பாம்புக்கு எவ்வித காயமும் ஏற்படாத வகையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டனர். பாம்பை கண்டுபிடிக்க நேரமானதைவிட, எஞ்சின் பகுதிக்குள் இருந்த சாரைப்பாம்பு லாவகமாக வெளியே எடுப்பதற்கு அதிக நேரம் பிடித்ததாம்.. பிறகு மீட்கப்பட்ட சாரைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்றனர்

சாரைப்பாம்பு விஷத்தன்மை கிடையாது என்றாலும், பைக்கின் உதிரி பாகங்களைக் கழற்றி, எஞ்சின் இடுக்குகளில் இருந்த பாம்பை வனத்துறையினர் சாதுரியமாக மீட்ட காட்சிகள் அப்பகுதியில் கூடியிருந்தவர்களிடையே கவனத்தை ஈர்த்தன..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+