நெருங்கும் குளிர்காலம்! வீடு தேடி வரும் பாம்புகள்.. இதை செய்தால் தவிர்க்கலாம்! உஷாரா இருங்க மக்களே!
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், தற்போது குளிர்காலமும் தொடங்கியிருக்கிறது. இந்த காலங்களில் பாம்புகள் வீடுகளுக்குள் நுழையும் ஆபத்து இருக்கிறது. எனவே, மக்கள் அலர்ட்டாக இருக்க வேண்டும். பாம்புகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
பாம்புகள் நம்மை போல கிடையாது. அவை குளிர் ரத்த பிராணிகள். அப்படியெனில்.. அது ரோட்டில் மல்லாந்து படுத்திருந்தால்.. உடல் வெப்பம் அதிகரிக்கும். அதுவே நாம் தண்ணீருக்குள் பாய்கிறது எனில், உடல் வெப்பம் அப்படியே சட்டென சரிந்துவிடும். இருக்கும் இடத்திற்கு ஏற்ப பாம்புகளுக்கு வெப்பநிலை கூடும், குறையும். நம்மை போல ஒரே வெப்பநிலையை மெயின்டெய்ன் செய்ய முடியாது.

எனவே வீடுகள் கதகதப்பாக இருக்கிறது என்று, வீட்டிற்குள் புகுந்துவிடும். இப்படி வரும் பாம்புகளில் ரொம்பவும் ஆபத்தானது நல்லபாம்பும், கட்டுவிரியனும், கண்ணாடிவிரியனும், சுருட்டை விரியனும்தான்.
நல்லபாம்பை பார்த்தவுடன் அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். இதன் தலையின் பின் பக்கத்தில் U வடிவம் இருக்கும். கோதுமை நிறத்தில் இருக்கும். ஆள் ரொம்ப சுறுசுறுப்பு.. விஷமும் அதிகம். இந்த பாம்புகள் பொதுவாக எலி வளைக்குள், கரையான் புத்துக்குள்தான் இருக்கும். மழை காலம் என்பதால், இதில் நீர் தேங்குவதால்.. அங்கிருந்து வெளியே வீடுகளுக்குள் பதுங்கிக்கொள்ளும்.
அடுத்த கட்டுவிரியன். இது பார்க்க கருப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும். தலையிலிருந்து சில செ.மீ வரையில் வெள்ளை கோடுகள் இருக்காது. பின்னர் வரிசையாக கோடுகள் இருக்கும். இதுவும் சாதுவான பாம்புதான். ஆனால், போட்டால் ஆள் காலி! கடித்த இடத்தில் பெரியதாக வலி இருக்காது. ஆனால் விஷம் உயிரை பறிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் தலைவன் இரவில்தான் வெளியே வருவான் என்பதால், வீடுகளின் மூலைகளில் ஒளிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
கண்ணாடிவிரியன், வழக்கமாக வயல்களில்தான் அதிகம் காணப்படும். இருப்பினும், மழைக்காலங்களில் வயலில் தண்ணீர் அதிகம் இருப்பதால், கதகதப்பான இடத்திற்காக வீடுகளை நோக்கி வரும். ரொம்ப மோசமான பாம்பு இது. தாவி சென்று கடிக்கும் பழக்கம் கொண்டது. வேகமாக நகராது என்றாலும்.. வேகமாக தாவி கடிக்கும். பார்க்க மலைப்பாம்பு குட்டி போல தெரியும். எனவே ஏமார்ந்துவிட வேண்டாம்.
சுருட்டை விரியனை பொறுத்தவரை, மலைப்பகுதிகளில்.. காய்ந்த இடத்தில்தான் அதிகம் காணப்படும். மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய கிராமங்களில் இந்த பாம்புகள் அதிகம் இருக்கும். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்த பாம்புகளை அதிகம் பார்க்க முடியும். இதனுடைய தோள் ரொம்பவே சொரசொரப்பாக இருப்பதால், அதை உரசி சத்தம் எழுப்பும். எனவே இந்த சவுண்டை வைத்து அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.
இந்த பாம்புகள் தவிர்த்து சாரைபாம்புகள், நீர்க்கோலி உள்ளிட்ட பாம்புகளும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் அபாயம் இருக்கிறது. எனவே, இதை தவிர்க்க.. வீடுகளில் தேவையற்ற குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். எலிகளைதேடிதான் பெரும்பாலும் பாம்புகள் வரும். எனவே, குப்பகளை அப்புறப்படுத்தினாலே பாம்புகள் வருவதை தவிர்த்துவிடலாம். குப்பைகளை அடிக்கடி அப்புறப்படுத்தும்போது.. பாம்புகள் ஒளிந்திருக்க இடம் கிடைக்காமல் போய்விடும்.
அதேபோல வீடுகளை சுற்றி புதர்களை வளரவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடுகளை தொடும்படி வளர்ந்திருக்கும் மரக்கிளைகளை வெட்டிவிட வேண்டும். விறகுகளை சுவற்றை ஒட்டி வைக்காமல், கொஞ்சம் உயர்த்தில் மேடை போன்ற இடத்தில் வைக்க வேண்டும். இதெல்லாம் செய்தாலே பாம்புகள் வீடுகளுக்குள் நுழைவதை பெரும்பாலும் தடுத்துவிடலாம்.
எல்லா பாம்புகளும் நமக்கு முக்கியம் என்பதால், அதை பார்த்தவுடன் அடித்து கொல்லாமல், வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
