"நாளை தீபம்".. CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்! சென்னை – கோவை – பெங்களூரில் இருந்து விரைவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை, கோவை, பெங்களூரில் இருந்து திருப்பரங்குன்றத்துக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் விரைந்துள்ளனர்.

Tomorrow Deepam CRPF forces rushed to Thiruparankundram following the Supreme Court order

கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது இடைக்கால உத்தரவை நிறைவேற்றாத தமிழக அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

அதுமட்டுமின்றி நாளையே திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அதிரடியாக உத்தரவிட்டது. கடந்த 24ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் ஏற்றப்பட்ட தீபத்தின் சுடரை எடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் உள்ளூர் போலீசாரின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், திருப்பரங்குன்றம் கோவில், தர்கா மற்றும் ஒட்டுமொத்த மலையின் பாதுகாப்பையும் மத்திய பாதுகாப்புப் படையான சிஆர்பிஎஃப் வசம் ஒப்படைத்தது. சிஆர்பிஎஃப் வீரர்கள் திருப்பரங்குன்றத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் திருப்பரங்குன்றம் நோக்கி விரைந்துள்ளனர். சென்னை, கோவை, பெங்களூரில் உள்ள சிஆர்பிஎஃப் வீரர்கள் தனித்தனி வாகனங்களில் திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டள்ளனர். கோவையில் இருந்து 200 சிஆர்பிஎஃப் வீரர்கள் திருப்பரங்குன்றம் விரைகின்றனர். இவர்கள் இரவு 10 மணிக்குள் திருப்பரங்குன்றத்தில் களமிறங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+