சொகுசு காரில் பயணித்த 5 பேர்! வாழப்பாடி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு!
சேலம்: வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் தீப்பற்றி எறிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக காரில் சென்ற 5 பேருக்கு எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தப்பினர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் பிரகாஷ். இவர் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சேலம் அரசு மருத்துவமனைக்கு தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார்.

அப்போது வழியில் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே சென்றபோது சொகுசு கார் திடீரென தீ பற்றியது. இதனை அறிந்த பிரகாஷ் காரை சாலையோரம் நிறுத்தி காரில் இருந்த குழந்தை மற்றும் உறவினர்கள் நான்கு பேரை கீழே இறக்கிவிட்டார்.
பிரகாஷின் தகவலின்பேரில் வாழப்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீப்பற்றி எரிந்த காரை உடனடியாக அணைத்ததால் பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
