எம்ஜிஆர் கையெழுத்திட்ட அரிய ரூ 100 நோட்டு! விஜய்க்கு பரிசளித்த முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கையொப்பமிட்ட அரிய 100 ரூபாய் நோட்டை முதல்வர் விஜய்க்கு நினைவுப் பரிசாக முன்னாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதன் வழங்கினார்.

தமிழக சட்டசபையின் முன்னாள் உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமான வி.வி.சுவாமிநாதன், டாக்டர் எச்.வி.ஹண்டே ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி முதல்வர் விஜய், இருவருக்கும் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

Ex Minister VV Swaminathan

அப்போது இருவரது காலிலும் விழுந்து ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது எம்ஜிஆர் கையெழுத்து போட்டு கொடுத்த ரூ 100 நோட்டை முதல்வர் விஜய்க்கு நினைவுப்பரிசாக சுவாமிநாதன் வழங்கினார். வி.வி. சுவாமிநாதன் , எம்ஜிஆர் தலைமையிலான அமைச்சரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, கைத்தறி, செய்தி, சுற்றுலா,மின்சாரம் உள்ளிட்ட 13 முக்கியத் துறைகளின் பொறுப்புகளை ஒரே நேரத்தில் வகித்து நிர்வாக அனுபவத்திலும் தனித்துவமான இடத்தை பெற்றார்.

அது போல் ஹண்டே, எம்ஜிஆர் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தார். போலியோ ஒழிப்பு, தடுப்பூசி திட்டங்கள், தொழுநோய் கட்டுப்பாடு, தாய் சேய்நல மேம்பாடு, கிராமப்புற சுகாதாரம் உள்ளிட்டவற்றை வலிமைப்படுத்தியதற்காக உயரிய விருதான பி.சி.ராய் விருது வழங்கப்பட்டது. கம்பராமாயணத்தை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

Ex Minister VV Swaminathan

இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது: "
சட்டப்பேரவை வரலாற்றில் இருபெரும் மூத்த முன்னாள் அமைச்சர்களுக்கு 100 வது பிறந்தநாள் கொண்டாடப்டுள்ளது. முதலமைச்சர் , சாமிநாதன் மற்றும் ஹண்டே அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

அது போல் முன்னாள் அமைச்சர் ஹண்டே செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது: இதே இடத்தில் 22 ஆண்டுகள் MLA வாக இருந்துள்ளேன். 15 ஆண்டுகள் எதிர்க்கட்சியிலும், 7 ஆண்டுகள் அமைச்சராகவும் பணியாற்றினேன்.

தற்போது ஆட்சி நன்றாக நடக்கிறது. நான் பாஜகவில் உள்ளேன். திருக்குறளை சொல்ல விரும்புகிறேன்.

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்" திருக்குறளை மேற்கோள் காட்டினார். மேலும் ஹண்டே தொடர்கையில், "எதிர்க்கட்சிகளின் கருத்துகள் மூலம் ஆளும்கட்சி துரிதமாக செயல்பட வேண்டும். நிறைய இளைஞர்கள் தற்போது அரசியலுக்கு வந்துள்ளனர்.

அவர்களுக்கு நான் வழங்கும் அறிவுரை, நன்கு படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஊழல் அற்றவர்களாக இருக்க வேண்டும். தூய்மையாக, பக்குவமான ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுரை வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+