Tirupparankundram Deepam: தீபமேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபம் ஏற்றும் நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அவமதிப்பு வழக்கில் தமிழக அரசைக் கண்டித்த நீதிமன்றம், திருப்பரங்குன்றம் மலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு அளிக்கவும், தர்காவை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவது தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு மற்றும் பக்தர்கள், தொல்லியல் துறை, ஆட்சியர் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். கார்த்திகை தீபம் முடிவடைவதற்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் ஒரு முறை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று மனுதாரர் கோரினர். மனுக்களை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் இருந்தது கடும் வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

Tirupparankundram

உச்சநீதிமன்றம் அடிபணியாது

மேலும், நீதிமன்ற உத்தரவுகள் மெத்தனமாகக் கையாளப்படும்போது அதனை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம். இத்தகைய சூழ்நிலைகள் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அரசியலமைப்பு சார்ந்த குழப்பத்துக்கு இது வழிவகுக்கும் என்றும் எந்தவொரு அதிகாரத்துக்கும் உச்சநீதிமன்றம் அடிபணியாது. ஆவணங்களின் அடிப்படையில், அதிகாரிகள் மீதான அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தெளிவாகின்றன என்று தெரிவித்தனர்.

தீபமேற்றும் நிகழ்வில் அனைவருக்கும் அனுமதி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்தில் இருந்து தீபத்தை எடுத்துச் சென்று கல் தூணில் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வில் பக்தர்களுக்கு அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலை மீது ஒவ்வொரு பக்தர்களும் விளக்கேற்றலாம் என்றும், தர்காவில் இருந்து 50 மீட்டருக்கு மேல் விளக்கு ஏற்றலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சிஆர்பிஎஃப் பாதுகாப்பு

மேலும், நாளைய தினம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், ஒட்டுமொத்த மலையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் உறுதி செய்ய ஆணையிட்டது. மலையின் மேலே உள்ள தர்காவை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சிஆர்பிஎஃப் படைக்கு முழு சுதந்திரம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்கா அல்லது மசூதிக்கு வரும் பக்தர்கள் தங்கள் வழிபாட்டை மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பக்தர்களை அனுமதிக்கவில்லை

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. அப்போது, வழக்கமான இடத்தில் கோயில் நிர்வாகம் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் முதலில் உத்தரவிட்டது. இதனிடையே, தீபத் தூணில் தீபமேற்றப்படாதது தொடர்பான அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற அனுமதி அளித்தார்.

மேலும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கும் உத்தரவிட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் 144 தடை உத்தரவைக் குறிப்பிட்டு காவல் துறையினர் அவர்களை மலை மீது செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், கடந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் அனைத்து பக்தர்களும் தீபம் ஏற்றலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+