அஜித், நயன்தாரா சீக்கிரத்தில் காணாமல் போயிடுவாங்க.. தலையில் கிரீடமா இருக்கு? தயாரிப்பாளர் வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித், நயன்தாரா இருவருமே தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரங்கள், இவர்கள் படங்கள் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி விடும். ஆனால் இவர்களுடைய படங்கள் வெளியாகும் போது பட ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டும் இருவரையும் பார்க்க முடியாது என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்த விஷயத்தை பற்றி திருப்பூர் சுப்பிரமணியன் பேசியிருப்பது மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

குறிப்பாக அஜித் சமீப காலமாக திரைப்படங்களை தாண்டி கார் ரேஸ், விளம்பரங்களில் என கவனம் செலுத்தி வருகிறார். பெரிய நிறுவனங்களில் விளம்பரங்களில் அவர் பிஸியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்களும் புலம்பி வருகிறார்கள். எப்படி இருந்த தல இப்போ சினிமாவை விட்டுவிட்டு விளம்பரங்களுக்கு போய் விட்டாரே என்று கமெண்ட்களில் பீலிங்கை கொட்டுகிறார்கள்.

Nayanthara

தயாரிப்பாளர் பேட்டி

ஆனால் அவர் நடிக்கும் படங்களின் நிகழ்ச்சிகள், பட பூஜைகள் என எதிலும் நேரில் வருவதில்லை. இதை வைத்துதான் இப்போது திருப்பூர் சுப்பிரமணியன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவர் பேசும்போது, "அஜித்குமார், நயன்தாராவிற்கு தலையில் கிரீடம் இருப்பது போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது மார்க்கெட் காலி ஆகிவிட்டது. கூடிய சீக்கிரத்தில் காணாமல் போய் விடுவார்கள். அவருக்கு பிஸ்கட் விளம்பரம், அம்பானியின் கூல் ட்ரிக்ஸ் விளம்பரம் என விளம்பரங்களில் நடிக்க தெரிகிறது, ஆனால் சொந்த படமான "டேர் டெவில்" படத்தின் பூஜைக்கு கூட வரவில்லை.

சொந்த தயாரிப்புக்கு காரணம்

மற்ற தயாரிப்பாளர்கள் அஜித்தை வைத்து படம் தயாரிக்க தயங்குகிறார்கள். அதனால் தான் அவர் சொந்தமாக படம் எடுக்க முடிவு செய்து இருக்கிறார். சூப்பர் ஸ்டார்கள் முதல் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் வரை தங்களுடைய படங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காக ப்ரோமோஷனகளில் பங்கேற்கிறார்கள். ஆனால் அஜித் மட்டும் தொடர்ந்து இதிலிருந்து விலகியே இருப்பது அவரது மார்க்கெட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று திருப்பூர் சுப்பிரமணியன் பேசியிருக்கிறார்.

மேலும் அவர் நயன்தாராவையும் விட்டு வைக்கலை. சமீபத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பட குழுவினர் பலர் கலந்து கொண்டபோதிலும் நயன்தாரா மட்டும் பங்கேற்காதது குறித்து விமர்சித்திருக்கிறார். "தனது சொந்த தயாரிப்பு படங்களுக்கு மட்டும் நயன்தாரா புரோமோசனுக்கு வருகிறார். மற்ற தயாரிப்பாளர்களின் படங்களை அவர் கண்டு கொள்வதில்லை. இதனால் அவருடைய படங்கள் தோல்வியை சந்திக்கிறது. அஜித், நயன்தாரா இருவரும் தங்களுக்கென்று ஒரு கெத்து இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் சினிமாவில் காணாமல் போய்விடுவார்கள்" என்று எச்சரிக்கும் தோணியில் அவர் பேசியிருக்கிறார்.

பல வருஷமாக இருக்கும் பழக்கம்

அஜித் ப்ரொமோஷனுக்கு வருவதில்லை என்பது இன்னைக்கு புதிதாக தோன்றிய விமர்சனம் கிடையாது. பல வருஷங்களாகவே அவர் தன்னுடைய படங்களின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர்கள் சந்திப்பு, ரசிகர்கள் சந்திப்பு என எதிலும் பங்கெடுக்காமல் இருப்பதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகிறார். அவருடைய படங்களை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினாலும் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்களுக்கு ப்ரமோஷன் என்பது முக்கியமான விஷயம். அதனால் அஜித்தின் இந்த முடிவு தயாரிப்பாளர்களுக்கு எந்த அளவுக்கு உதவுகிறது? எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது? என்று விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இறப்பிலும் கலந்து கொள்ளவில்லை

அதுமட்டுமல்லாமல் திரையுலகில் முக்கியமான பிரபலங்கள் இறந்தால் அவர்களுடைய இறுதி நிகழ்வுகளில் கூட அஜித் கலந்து கொள்வதில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. சமீபத்தில் கூட பாரதிராஜா, பாக்யராஜ், தேவா என பலர் இறந்திருக்கிறார்கள். அதிலும் அஜித் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களின் இறப்புக்கு கூட அஜித் நேரிலும் வரவில்லை, அறிக்கையும் வெளியிடவில்லை. இதனால் அவருடைய ரசிகர்களே அவரை விமர்சித்து போஸ்ட் போட்டு வந்ததையும் பார்க்க முடிந்தது. இப்படி இருக்கையில் இப்போது திருப்பூர் சுப்பிரமணியன் பேசியதும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+