யூடியூபர்ஸ் வீடியோக்களால் வாழ்க்கையே போச்சு! உயிரோடு இருக்கும்போதே இப்படி? நடிகை தேவி பிரியா ஆதங்கம்
சென்னை: நடிகை, நடிகர்கள் பற்றி யூடியூப் சேனல்களில் வெளியாகும் சில வீடியோக்கள் எந்த அளவுக்கு அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்திருக்கின்றன என்பதுக்கு நடிகை தேவி பிரியா பகிர்ந்து இருக்கும் விஷயங்களே உதாரணம். ஒரு சிலர் தங்களுடைய வீடியோவுக்கு வியூஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த ஆதாரமும் இல்லாமல் பிரபலங்களை பற்றி தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். ஆனால் அந்த வீடியோவால் பாதிக்கப்படுபவர்களின் நிலை என்ன? என்பதை பற்றி யாரும் யோசிப்பதில்லை என்று தேவி பிரியா வேதனையுடன் பேசி இருக்கிறார்.
நடிகை தேவி பிரியா பேட்டி
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தேவி பிரியா தன்னைப் பற்றி வெளியான தவறான யூடியுப் வீடியோக்கள் தனது வாழ்க்கை எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்திய என என்பதை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார். தேவி பிரியா அந்த பேட்டியில் பேசும்போது, "சில யூடியூபர்ஸ் அவர்களுடைய வீயூஸ்க்காக அடுத்தவர்களை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் தப்பு தப்பாக பேசி விடுகிறார்கள். அவர்கள் பேசிவிட்டு ஒருநாள் சம்பளத்தை வாங்கி விட்டு போய்விடுவார்கள் ஆனால் அந்த வீடியோ பல வருஷங்களாக சோஷல் மீடியாவில் வலம் வந்து கொண்டே இருக்கும்.

அதை பார்க்கும் மக்கள் எங்களை பற்றி என்ன நினைப்பார்கள்? அதுவும் என்னை போன்றவர்கள் எல்லாம் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாலே பலருக்கு பிடிக்காது. அப்படி இருக்கும்போது இவங்க ஏதாவது சொல்லும்போது அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி விடுகிறார்கள். அதனால் எங்களுடைய சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வருகிறது. அதைப்பற்றி எல்லாம் இதுபோல வீடியோ வெளியிடுபவர்களுக்கு கவலையே கிடையாது.
எதற்காக இப்படி பண்ணுறாங்கன்னு தெரியல. யூடியூப் வீடியோக்களால் என்னோட வாழ்க்கையே நாசமா போச்சு. இது போன்று மோசமாக நம்மைப் பற்றி பேசி வீடியோ போட்டு விடுகிறார்கள். அதற்குப் பிறகு ஒரு நல்ல விசேஷத்துக்கு கூட நம்மை கூப்பிட யோசிப்பார்கள். சீரியல்களிலும், திரைப்படங்களிலும் பாசிட்டிவ் ரோலில் நடிப்பவர்களைத்தான் அதிகமாக நல்ல விசேஷங்களுக்கு கூப்பிடுவார்கள். காரணம் அவர்கள் தான் நல்லவங்க என்று மக்கள் மத்தியில் ஒரு மைன்ட் செட் இருக்கிறது.
தேவி பிரியா பற்றிய வதந்தி
அதேபோல நாங்கள் நெகட்டிவ்வாக நடிப்பதால் இவங்க தப்பானவங்க என்று நினைக்கிறார்கள். அதற்கு மேலே இவங்களும் வீடியோக்கள் வெளியிட்டு நம்மை மேலும் அசிங்கப்படுத்தி விடுறாங்க. சமீபத்தில் கூட நான் தற்கொலை செய்து இறந்துவிட்டேன் என்று ஒரு வீடியோ வெளியாகி பெரிதாக பேசப்பட்டது. நான் அப்படி அவர்களுக்கு என்னதான் பண்ணுனேன்னு எனக்கே தெரியல. எதற்காக என்னை பற்றி இப்படி எல்லாம் தப்பு தப்பா வீடியோ போடுறாங்க, இதற்கு முன்பும் பல தவறான விஷயங்களை பரப்பி இருக்கிறார்கள்.
தவறான வீடியோ
விஜே சித்ரா இறந்த சமயத்தில் கூட, சிலர் எனக்கு போன் பண்ணி இதை பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்பார்கள். அப்போ கூட நான் தற்கொலை பண்ணிக்கிறது கோழைத்தனம் என்று சொல்லி இருக்கிறேன். நம்மை நம்பி இருக்கிறவங்க வாழ்நாள் முழுவதும் இந்த சமுதாயத்தில் எத்தனை கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும், இதெல்லாம் நினைச்சு பாக்காம இவங்களால எப்படி இந்த முடிவு எடுக்க முடியுது என்று நானே திட்டி இருக்கிறேன். அப்படி இருக்கும் போது நான் தற்கொலை செய்து இறந்து போயிட்டேன் என்று வீடியோ வெளியிட்டாங்க, அது எனக்கு ரொம்பவே வருத்தமா இருந்தது என்று அந்த பேட்டியில் நடிகை தேவி பிரியா பேசியிருக்கிறார்.
திரையில் ஒரு கேரக்டராக நடிப்பவர்களின் நிஜ வாழ்க்கையிலும் அதே குணத்துடன் இருப்பார்கள் என்று நினைப்பது எவ்வளவு தவறானது என்பதை தேவி பிரியா பேசி இருக்கிறார். குறிப்பாக ஒரு வீடியோவை பதிவேற்றுவதற்கு முன்பு அதன் உண்மை தன்மையும், அது சம்பந்தப்பட்ட நபரின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பையும் யோசிக்க வேண்டும் என்பதுதான் அவரது வேதனையான பேச்சின் பின்னணியில் இருக்கும் முக்கியமான செய்தி.




Click it and Unblock the Notifications
