நீங்க முதலைக்கண்ணீர் வடிக்கிறீர்களா என்பதை கண்டுபிடிப்போம்! தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழக அரசு இப்போது வடிப்பது உண்மையான கண்ணீரா அல்லது வெறும் முதலைக் கண்ணீரா என்பதை அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து நாங்கள் கண்டுபிடிப்போம் என தெரிவித்தார்.

Justice Aravind Kumar

நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்

நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (இந்த வழக்கு விசாரணை தொடர்ந்தது. விசாரணையின்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், நவம்பர் 24-ம் தேதி இரவு 7 மணிக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துமாறு கோவில் தேவஸ்தானத்திற்கு ஆட்சியர் மின்னஞ்சல் அனுப்பினார். இந்தியத் தொல்லியல் துறை (ASI) அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில்தான் இருந்தோம். அவர்களைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனத் தெரிவித்தார்.

மேலும், தீபம் ஏற்றப்படவில்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அது எங்களது தவறா? தேவையான ஏற்பாடுகளைச் செய்வது மட்டுமே ஆட்சியரின் பணி; நான் நேரடியாகச் சென்று தீபம் ஏற்ற முடியாது. 2013-ம் ஆண்டிலிருந்தே உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் ஸ்தானிகர்கள் உறுதியாக உள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில்கூட உத்தரவைச் செயல்படுத்த முயற்சிப்பேன் என்றுதான் கூறினேனே தவிர, நானே தீபம் ஏற்றுவேன் என எங்கும் கூறவில்லை என ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு விவரங்கள் தாக்கல்

மதுரை காவல் ஆணையர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்தது. 2,400 உள்ளூர் போலீசார், 1,200 ஆயுதப்படை போலீசார், 24 சிறப்புக் காவல் படைப் பிரிவுகள் மற்றும் 11 காவல் கண்காணிப்பாளர்கள் (SP) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக 361 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.. 4 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

நீதிபதிகளின் 'முதலைக் கண்ணீர்' சாடலும், சட்டக் கேள்வியும்

தமிழக அரசு மற்றும் அதிகாரிகளின் இந்த விளக்கங்களைக் கேட்ட நீதிபதி அரவிந்த் குமார், நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா இல்லை முதலைக் கண்ணீரா என்பதை நாங்கள் பார்ப்போம். அனைத்து ஆவணங்களையும் நாங்கள் முழுமையாக ஆய்வு செய்வோம் எனக் கடுமையாகச் சாடினார். மேலும், அதிகாரிகள் நடத்திய அனைத்து ஆலோசனைக் கூட்டங்களின் விவரங்களையும் (Proceedings) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் (EO) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, "கோவில் நிர்வாகப் பணிகள் மட்டுமே செயல் அலுவலரின் வரம்பிற்குள் வரும்; மதச் சடங்குகளில் அவர் தலையிட முடியாது" என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "கோவில் தேவஸ்தானக் கூட்டத்தை யார் கூட்டுவது?" எனக் கேள்வி எழுப்பினர். அதற்குத் தமிழக அரசுத் தரப்பில், "அறங்காவலர்களே கூட்டத்தைக் கூட்டுவார்கள்" எனப் பதிலளிக்கப்பட்டது. உடனே, "இல்லை, உங்களது சட்டத்தின்படி கோவில் செயல் அலுவலர்தான் அறங்காவலர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்" என நீதிபதிகள் சுட்டிக்காட்டியதால், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் திணறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+