கோயம்புத்தூர், தேனியில் கொட்டப்போகும் கனமழை! வெளியானது அடுத்த ஒரு வாரத்திற்கான அப்டேட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: எதிர்பார்த்த அளவுக்கு வடகிழக்கு பருவமழை கைகொடுக்காத நிலையில், தற்போது ஒரு சில மாவட்டங்களில் மழை தொடங்கியிருக்கிறது. இன்று கோயம்புத்தூர் மற்றும் தேனியில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "இன்று கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களிலும்.. நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் கனமழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று காலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்திருந்தது. அதேபோல தென் மாவட்டங்களிலும் மழை பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
