Arul Vignesh: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டது ஏன்? காவல் துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து தமிழக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: 23.11.2026 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப் பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Tamilnadu police

தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் WP (Crl) No. 3183/2026 வழக்கில் 24.11.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . சிருஷ்டி சிங், IPS அவர்கள், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் (IGP) என். காமினி, IPS அவர்களின் மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டார்.

விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து இதுவரை 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர்.

மேலும், POSH சட்டத்தின் கீழ் வரும் விவரங்கள் தொடர்பாக எந்தவொரு தகவலையும் வெளியிடவோ, பகிரவோ அல்லது பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவுக்கு முரணாக எந்தவொரு பதிவையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையத்தில் உள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரை சிருஷ்டி சிங் ஐபிஎஸ் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்ட அவர் தியாகதுருகம் சுற்றுலா மாளிகையில் வைத்து விசாரணைக்குள்படுத்தப்படுகிறார்.

விசாரணைக்கு பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+