திருப்பரங்குன்றம் தீர்ப்பு.. சோதனையை கொடுத்துட்டு, சந்தோசத்தை தந்த முருகா! மோகன்ஜி செய்த செயல்
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்துண் விவகாரம் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பெரிய விவாதமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு மலை மேல் உள்ள தீபத்தூனில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதில் இயக்குனர் மோகன்ஜி தொடர்ந்து உறுதியாக பேசி வந்தார். இப்போது நீதிமன்ற உத்தரவு வெளியாகி உள்ள நிலையில் தனது மகளுடன் சரவெடி வெடித்து தனது சந்தோஷத்தை கொண்டாடி இருக்கிறார்.
திருப்பரங்குன்றம் விவகாரம்
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூனில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன. தீபம் ஏற்ற அனுமதி கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அது தொடர்பான உத்தரவை நிறைவேற்றவில்லை என தமிழக அரசுக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே தீபத்தூனில் இந்த ஆண்டு தீபம் ஏற்றப்படும் என்று இயக்குனர் மோகன் ஜி தொடர்ந்து நம்பிக்கையுடனே பேசி வந்தார்.

நீதிமன்ற தீர்ப்பு
இது குறித்து அவர் சோசியல் மீடியா பக்கத்தில் அதிகமான பதிவுகளும் வெளியிட்டு இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தீபத்தூண் விவகாரத்தை நீண்ட நாட்களாக பேசி வந்த மோகன்ஜி தரப்பினருக்கு மகிழ்ச்சியான செய்தியாக இது அமைந்திருக்கிறது.
மோகன் ஜி வீடியோ
இதை எடுத்து மோகன்ஜி தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவும் கவனம் பெற்றுள்ளது. அதில் தனது மகளுடன் சேர்ந்து சரவெடி வெடித்து கொண்டாடி இருக்கிறார். தீபத்தூண் விவகாரத்தில் இத்தனை நாட்களாக போராட்டம், சர்ச்சை, நீதிமன்றம் என தொடர்ந்து வந்த நிலையில் தற்போது கிடைத்த உத்தரவை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாகவே இந்த வீடியோ இருக்கிறது. அந்த வீடியோவில் முருகனை நினைத்து உருக்கமாக மோகன் ஜி, "முருகா எப்போதுமே நீ சோதனையை கொடுத்துட்டு.. அதற்கு பிறகு தான் சந்தோஷத்தை கொடுப்ப. தீபம் விஷயத்திலும் அப்படித்தானே நீ செஞ்சிருக்க" என்று பேசியிருக்கிறார்.
சமூக வலைதள பதிவு
மேலும் தனது twitter பக்கத்தில் முருகாற்றுப்படையில் இடம் பெற்றுள்ள, "உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டா அங்கு ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி" என்ற வரிகளையும் பதிவிட்டு இருக்கிறார். திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து தனது கருத்தை தெரிவித்து வந்தார். தற்போது நீதிமன்ற உத்தரவு வெளியாகியிருக்கும் நிலையில் அவருடைய இந்த வீடியோவும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.




Click it and Unblock the Notifications
