இனி இம்பேக்ட் பிளேயர் கிடையாது தம்பி.. மும்பை கேப்டனான ரோகித் சர்மா.. பின்னணியில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்பட்டு மும்பை அணிக்கு வந்த போது, ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பின் ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக மும்பை அணியில் பதவியை பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2020ஆம் ஆண்டு மும்பை அணி கடைசியாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இதன்பின் 3 சீசன்களாக மும்பை அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி டிரேட் மூலமாக வாங்கியது.

Rohit Sharma

அதன்பின் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார். 5 முறை சாம்பியன் பட்டத்தை மும்பை அணிக்கு பெற்று கொடுத்த போதும், மும்பை அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை எளிதாக பதவி நீக்கம் செய்தது. இதன்பின் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியிலும் மும்பை அணியின் தோல்வி தொடர்ந்தது.

கடந்த 3 சீசன்களில் ஒரேயொரு முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை அணி முன்னேறியது. கடந்த சீசனில் மும்பை அணி சொதப்பலோ சொதப்பலை செய்தது. இதனால் ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலமாக வெளியேற்ற மும்பை அணி முடிவு செய்தது. அதன் அடிப்படையில் பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்துவிட்டு, பஞ்சாப் அணியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கை பெற்று கொண்டது.

இதனால் மும்பை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் நியூசிலாந்து தொடருக்கு முன்பாகவே மும்பை அணியின் பயிற்சியாளர் குழுவையே ரோகித் சர்மா தான் முடிவு செய்தார். அப்போதே ஆகாஷ் அம்பானி தரப்பில் ரோகித் சர்மாவிடம் கேப்டன் பொறுப்பை ஏற்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது திலக் வர்மா அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பெயர்களை பரிந்துரை செய்தார்.

ஆனால் ரோகித் சர்மாவை கேப்டனாக மும்பை உரிமையாளர்கள் விரும்பினர். இதனால் ரோகித் சர்மாவும் ஏற்றுக் கொள்ள, தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சூர்யகுமார் யாதவ், பும்ரா உள்ளிட்ட சீனியர்கள் இருக்கும் போது ரோகித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன் பதவி அளித்திருப்பது விவாதமாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+