உடனே வாங்க.. திருப்பரங்குன்றம் தீபத்தையொட்டி டிஜிபி உள்பட உயரதிகாரிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை
சென்னை: சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற இன்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தமிழக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பாமனி இல்லத்தில் முதல்வர் விஜய் தலைமை செயலாளர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உள்பட மூத்த போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்ட நிலையில் அதன் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளான நவம்பர் 24ம் தேதி மாலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதனை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நாளைக்கே திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.
அதுமட்டுமின்றி திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக போலீசாரின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், திருப்பரங்குன்றம் கோவில், தர்கா மற்றும் ஒட்டுமொத்த மலையின் பாதுகாப்பையும் மத்திய பாதுகாப்பு படையான சிஆர்பிஎஃப் வசம் ஒப்படைத்தது. நாளை சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பில் தான் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட உள்ளது. இது தமிழக அரசுக்கு பெரிய பின்னடைவாக மாறி உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து முதல்வர் விஜய் இன்று அவசரமாக மாநில சட்டம் - ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். முதல்வர் விஜய் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழாவை அவசரஅவசரமாக முடித்துவிட்டு இந்த கூட்டத்தில் பங்கேற்றார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பாமனி இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. தலைமை செயலாளர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உள்பட மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தீபத்தூண் பகுதிக்கு பொதுமக்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் நிறையபேர் கூட வாய்ப்புள்ளது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு அதுதொடர்பான அறிவுரைகளை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
