அயன் பட வில்லன் கமலேஷா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே! சீரியலில் என்ட்ரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடித்த அயன் படத்தில் மிரட்டலான வில்லனாக வந்து சில வசனங்களால் இன்றைக்கும் மீம் டெம்ப்ளட்டாக வலம் வந்த நடிகர் ஆகாஷ் தீப் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? அவருடைய தற்போதைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. குறிப்பாக அயன் படத்தில் பார்த்த தோற்றத்துக்கும் இப்போது இருக்கும் தோற்றத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதால் பலர் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் பார்த்து வருகின்றனர்.

2009ல் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் படத்தில் வில்லனாக நடித்த அகாஷ்தீப் சைகலை அவ்வளவு சீக்கிரமாக ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவருடைய பெயர் வேண்டுமென்றால் தமிழ் ரசிகர்களுக்கு வாயில் நுழையாமல் இருக்கலாம். ஆனால் எல்லோரும் அவரை அயன் கமலேஷ் என்று தான் இப்ப வரைக்கும் சொல்லி வருகிறார்கள். காரணம் அவருடைய ஸ்டைலும், நடிப்பும் ரசிகர்களிடம் நன்றாகவே பதிந்து விட்டது.

Ayan movie

அயன் பட வில்லன்

அந்தப் படத்தில் இவர் பேசும் சில வசனங்கள் இப்போதும் சோசியல் மீடியாவில் மீம்ஸ் டெம்ப்ளட்டாக வைரல் ஆகி வருகிறது. அதிலும், "சாலா நீ யார்ரா?, லட்டுல வச்சேன்னு நினைச்சியா தாஸ்" போன்ற வசனங்கள் இப்போதும் மீம்ஸ் மற்றும் ரிலீஸ்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு படம் வெளியாகி இத்தனை வருஷங்களுக்கு வந்தும் அந்த கதாபாத்திரம் உயிர்ப்போடு இருப்பது ஆச்சரியம்தான். அயன் படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த கவண் படத்திலும் அகாஷ் நடித்திருந்தார்.

சீரியலில் நடிப்பு

தமிழ் படங்களில் அவ்வப்போது பார்த்தாலும் அவருடைய ஆரம்ப பயணமே இந்தி சீரியலில் தான் தொடங்கியது. 2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'Kyunki Saas Bhi Kabhi Bahu Thi' சீரியல் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல இந்தி சீரியல்களில் நடித்திருந்தார். தொலைக்காட்சி ரசிகர்களுக்கு இவரை அந்த சீரியல் மூலமாகவும் தெரிந்து இருக்கலாம். ஆனால் 2017க்கு பிறகு நடிப்பிலிருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்ட அகாஷ் பல வருஷங்களாக பெரிய திரையிலும் வராமல் இருந்தார்.

Ayan movie

இப்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்க தொடங்கி இருப்பதுடன், தற்போதைய அவருடைய கெட்டப் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அயன் பட காலகட்டத்தில் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் பெரிய வித்தியாசத்தை காட்டி இருக்கிறார். மொழுக்கு மொழுக்கு என அவருடைய முகமே இப்போ மாறி போய் இருக்கிறது. தன்னுடைய முதல் சீரியலான Kyunki Saas Bhi Kabhi Bahu Thi'ல் இரண்டாம் பாகத்தில் மீண்டும் நடிக்கிறார்.

விமர்சனத்துக்கு பதில்

அதுவும் முன்பு ஸ்ரீநிதி ராணியின் மகனாக நடித்த கேரக்டரில் அடுத்த தலைமுறையாக நடிக்கிறார். அவருடைய புதிய தோற்றத்தை பார்த்ததும் அயன் படத்தில் பார்த்த அந்த வில்லன் இப்படி மாறிவிட்டாரே என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் அவருடைய தோற்றம் மாற்றத்தை விமர்சித்தாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நடிகர்கள் தங்களை மாற்றிக் கொள்வது இயல்பான விஷயம் தான்.

ரசிகர்கள் கேள்வி

அதேபோல சோசியல் மீடியாவில் வரும் விமர்சனங்களை பற்றி அவர் பெரிதாக கவலைப்படுவதில்லை என்று ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். இவர் இப்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி சீரியலில் நடித்துக் கொண்டிருப்பதை வைத்து சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதற்கு அவர், "சோசியல் மீடியாவில் வரும் விமர்சனங்கள் எல்லாம் வெறும் சத்தம் தான்" என்று சொல்லி இருக்கிறார். அவர் ஹிந்தி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் மீண்டும் தமிழுக்கு எப்போ நடிக்க வருவீங்க என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+