ஆட்சியர் புகாரளித்து 4 நாட்களுக்கு பின்! தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தாமதமாக கைது செய்யப்பட்டது ஏன்?

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் புகார் அளித்து 4 நாட்கள் கடந்துவிட்ட சூழலில், இன்று அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை நீதிமன்றம் மற்றும் மகளிர் ஆணையம் கையில் எடுத்ததால், தவெக அரசுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தது. ஆனாலும் அமைச்சர்கள் ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல்குமார், காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் ஆதரவு அளித்தனர்.

TVK MLA Arul Vignesh

இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற தலையீட்டுக்கு பின் அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு, விசாரணை நடந்தது. இருப்பினும் புகார் அளிக்கப்பட்ட 4 நாட்களாகியும் அருள் விக்னேஷ் கைது செய்யப்படவில்லை.

அருள் விக்னேஷிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் தவெக அரசு அருள் விக்னேஷ்-ஐ பாதுகாப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் அருள் விக்னேஷ் விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட யாருமே வாய் திறக்கவில்லை.

இதனால் அருள் விக்னேஷ் எப்போது கைது செய்யப்படுவார் என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் பெறப்பட்டு 4 நாட்களுக்கு பின், அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை 31ஆம் தேதியே பெண் ஆட்சியர் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் அளித்துள்ளார். இந்த விவரம் நீதிமன்றம் வாயிலாக வெளி வந்தது.

117 நாட்களாக அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு கூட செய்யாமல் தவெக அரசு அமைதி காத்தது. இதனால் ஆட்சியரை சமாதானம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா என்று எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். தற்போது அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தக் கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அருள் விக்னேஷ் மீது புகார் அளிக்கப்பட்டு 4 நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த 4 நாட்களில் அருள் விக்னேஷ் தரப்புக்கு ஏதேனும் பயிற்சிகள் அளிக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் உதவிகள் வழங்கப்பட்டதா என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+