முதல்வர் விஜய்க்கு அடுத்தடுத்து விழுந்த அடி.. இன்று ஒரே நாளில் 2 வழக்குகளில் பின்னடைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அடுத்தடுத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதன்படி இன்று ஒரே நாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுதல் மற்றும் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது என அடுத்தடுத்து 2 விஷயங்களில் முதல்வர் விஜய்க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதுபற்றி இங்கே பார்க்கலாம். பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

cm-vijay-led-tamil-nadu-government-has-faced-two-setbacks-on-today

சட்டசபை தேர்தலில் முதல் முறையாக வென்று தவெக தலைவர் விஜய் முதல்வராகி உள்ளார். 6 மாத ஆட்சியை நிறைவு செய்துள்ளார். தற்போது அடுத்தடுத்து அவரது அரசும், அவரது கட்சியினரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இது முதல்வர் விஜய்க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இன்று ஒரே நாளில் முதல்வர் விஜய்க்கு 2 விஷயங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதல் விஷயம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விஷயமாகும்.

கார்த்திகை தீப நாளான கடந்த 24ம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதனை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசின் செயல்பாட்டில் கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம் நாளை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி தமிழக காவல்துறையை கைவிட்டு சிஆர்பிஎஃப் எனும் மத்திய படையினரின் பாதுகாப்பில் தீபமேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இது இன்று மதியம் முதல்வர் விஜய்யின் அரசுக்கு ஏற்பட்ட முதல் பின்னடைவாகும்.

அதன்பிறகு இன்று மாலையில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். மாவட்ட கலெக்டராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்பட்ட புகாரில் அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு விசாரணை அதிகாரியான திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் கடந்த 4 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தார். இன்று மாலையில் அருள் விக்னேஷ் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தற்போது அருள் விக்னேஷிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவும் தவெகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அமைச்சர் நிர்மல் குமார் உள்பட பல்வேறு தவெகவினர் அருள் விக்னேஷ் விவகாரத்தில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறிய நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் ஜூலை மாதமே கலெக்டர் சார்பில் தலைமை செயலாளர் சாய்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கும்போது 4 மாதங்கள் கழித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு பிறகு தான் அருள் விக்னேஷ் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏனென்றால் பெண் கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்தாலும் கூட 4 மாதங்களாக முதல்வர் விஜய் சொந்த கட்சி எம்எல்ஏவான அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுவும் முதல்வர் விஜய் மற்றும் அவரது அரசுக்கு சிக்கலாக மாறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+