கிருஷ்ணகிரியில் 3.5 ஏக்கர் நிலம்.. 60 ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் பெயரில் பட்டா மாறுதல்! வெடித்த மோதல்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 3.5 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. 1997ம் ஆண்டு வாங்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய வந்தபோது ஏற்பட்ட பிரச்சினை, ஒருகட்டத்தில் அடிதடியாக மாறி விட்டது.. இதனால் ஓசூர் - தருமபுரி சாலையில் 2 தரப்பினரும் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..!!

ஓசூர் அடுத்த காரப்பள்ளி கிராமத்தில் சின்ன எல்லப்பா என்பவருக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை கடந்த 1997ம் ஆண்டு அப்போது அரசு வேலை பார்த்து வந்த 60 பட்டியலின ஊழியர்கள் வாங்கியுள்ளனர்.

Krishnagiri Land Dispute

கிருஷ்ணகிரி நிலம்

இவர்கள் வருவாய்த்துறை, காவல்துறை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தவர்கள். நிலத்தை வாங்கியதும் அவர்களது பெயர்களிலேயே பட்டாவும் மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், நிலத்தை விற்ற சின்ன எல்லப்பாவின் வாரிசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, நிலத்தை விற்பனை செய்தபோது குடும்பத்தில் உள்ள பெண்கள் யாரும் கையெழுத்திடவில்லை என்று கூறுகிறார்கள். இதனால் அந்த நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார்கள்.

பட்டா மாறுதல்

இதனிடையே, நிலம் வாங்கிய 60 பேரும் தற்போது ஓய்வுபெற்றுவிட்டனர். தங்களிடம் இருந்து வாங்கிய நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று சின்ன எல்லப்பாவின் வாரிசுகள் தொடர்ந்து விவசாயம் செய்து வருவதால், தங்களது நிலத்தை மீட்டுத் தரக்கோரி 60 பேரும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந்த மனுவை தொடர்ந்து நிலத்தை அளவீடு செய்ய ஓசூர் வட்டாட்சியர் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக இன்று இரு தரப்பினரையும் வரவழைத்துள்ளார். ஆனால், நிலத்தை அளவீடு செய்யும் இடத்துக்கு காவல்துறையினர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் என ஒருத்தருமே வரவில்லையாம்.. சர்வேயர் மட்டும் அங்கே வந்திருக்கிறார்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்

அப்போது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் என 50-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்துள்ளனர். ராகி பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்துக்குள் அவர்கள் சென்றிருக்கிறார்கள்.. ஆனால் அதற்கு அங்கு விவசாயம் செய்து வரும் இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்... இதனால் 2 தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம்தான், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அடிதடியாக மாறிவிட்டது. அப்போது ராகி பயிர் செய்து வரும் தரப்பினர், நிலத்தை சொந்தம் கொண்டாடியவர்களை சாலையிலேயே வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து இரு தரப்பினரும் ஓசூர் - தருமபுரி சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஓசூர் நகர போலீசார் வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், நிலம் தொடர்பான பிரச்சினை மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+