டாஸ்மாக் ஊழியர்கள் சற்றும் எதிர்பார்க்காத அறிவிப்பு. . 1ம் தேதி முதல் வருகிறது புதிய ரூல்ஸ்
சென்னை: டாஸ்மாக் ஊழியர்கள் சற்றும் எதிர்பார்க்காத புதிய ரூல்ஸ் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 8 மணி நேர பணிமுறை கடைபிடிக்கப்படும். இதற்காக 2 வகையான பணிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் முறையில் 2 பணிசுழற்சிகளாக பணியாற்ற வேண்டும் என்று அறிவித்துள்ளது தமிழக அரசு. அதற்காக டாஸ்மாக் ஊழியர்களுக்கு டிசம்பர் 1-ந்தேதி முதல் ஆன்லைன் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- "டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை செல்போன் செயலி உள்ள நலத்திட்ட தொகுதி மூலம் பதிவு செய்யவேண்டும்.

இதன்படி, தற்செயல் விடுப்பு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மத விழாக்களுக்கான பண்டிகை முன்பணம், மருத்துவச் செலவுகளை திரும்பப் பெறுதல், குடும்ப ஓய்வூதியம் மற்றும் சேவை தொடர்பான குறைகள், மனுக்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதையும் செல்போன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இனிமேல் இதற்காக தனியாக காகித விண்ணப்பம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
8 மணி நேரம் வேலை
டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 8 மணி நேர பணிமுறை கடைபிடிக்கப்படும். இதற்காக 2 வகையான பணிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் முறையில் 2 பணிசுழற்சிகளாக பணியாற்ற வேண்டும். முதல் சுழற்சி காலை 11.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும், 2-வது சுழற்சி பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் இருக்கும். மற்றொரு முறையில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை பணியாற்ற வேண்டும். இதில் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஓய்வு வழங்கப்படும். இந்த முறையில் தொடர்ந்து 5 நாட்கள் பணியாற்றிய பிறகு ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும். எந்த முறையில் பணியாற்றினாலும் ஒரு ஊழியர் வாரத்தில் 48 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றாத வகையில் பணிப்பட்டியல் தயாரிக்க வேண்டும்.
மருத்துவ விடுப்பு
அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் செல்போனில் உள்ள செயலியில் வருகையை பதிவு செய்ய வேண்டும். பணிக்கு வந்ததும் வருகைப்பதிவும், பணி முடிந்து செல்லும்போது வெளியேறும் பதிவும் மேற்கொள்ள வேண்டும். கடையின் அன்றைய வருகைப்பதிவு மதியம் 1 மணிக்குள் முதற்கட்டமாக மூடப்படும். அதன் பிறகு கடை மேற்பார்வையாளர் பதிவுகளை சரிபார்த்து பிற்பகல் 3 மணிக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களும் அதற்கான காரணத்துடன் பதிவு செய்யப்படும்.
செல்போன் செயலியில் வருகைப்பதிவு செய்வது முற்றிலும் தடை
ஒரு ஊழியருக்கு பதிலாக மற்றொரு ஊழியர் செல்போன் செயலியில் வருகைப்பதிவு செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டால் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். இதற்காக கடை மேற்பார்வையாளர் பணிப்பட்டியலை தயாரித்து செல்போன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். ஒரே ஊழியர் தொடர்ந்து அதிக நேரம் பணியாற்றும் நிலை ஏற்படாத வகையிலும், அனைவருக்கும் வார விடுமுறை கிடைக்கும் வகையிலும் பணிப்பட்டியல் அமைக்க வேண்டும்.
2 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும்
தகுதியுள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஒரு மாதத்தில் சம்பளத்துடன் 2 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். தற்செயல் விடுப்புக்கான விண்ணப்பத்தை செல்போன் மூலம் பதிவு செய்ய வேண்டும். அவசர சூழ்நிலையில் முன்கூட்டியே விண்ணப்பிக்க முடியாத நிலையில், கடை மேற்பார்வையாளரின் பரிந்துரையுடன் பின்னர் விண்ணப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விடுப்பு காரணமாக கடையில் பணியாளர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் கடை மேற்பார்வையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Click it and Unblock the Notifications
