திருப்பரங்குன்றம் தீபம்.. தமிழக அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர.. உச்ச நீதிமன்றம் அதிரடி அனுமதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பான விவகாரத்தில், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நேற்றைய தினம் கல்தூணில் தீபம் ஏற்றப்படாத நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முரண்பாடான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Thiruparankundram

பின்னணி என்ன?

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள கல் தூணில் இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேலும், தீபம் ஏற்றியது தொடர்பாக 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நேற்றைய தினம் மாலை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. மாறாக, வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு எதிராக இந்து அமைப்புகளும், மனுதாரர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?

இந்நிலையில், இந்த விவகாரம் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் இரண்டு விதமான தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த முடியவில்லை' எனத் தமிழக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மறுபுறம் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தாங்கள் செயல்படுத்திவிட்டோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

உயர் நீதிமன்றத்திலும் பொய் சொன்ன அரசு - மனுதாரர் குற்றச்சாட்டு

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான ராம ரவிக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசின் செயல்பாடுகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தமிழக அரசு வேண்டுமென்றே மீறியுள்ளது. அதுமட்டுமின்றி, நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனத் தமிழக அரசு பொய் சொல்லி நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளது என அவர் வாதிட்டார்.

அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாதது தொடர்பாக, தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது எனத் தெரிவித்து அனுமதி அளித்தனர்.

விஜய் அரசுக்கு அதிகரிக்கும் சட்ட நெருக்கடி

ஏற்கனவே நேற்று நடந்த விசாரணையில், உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை எனச் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்திருந்தது. நீதிமன்றத்தில் உத்தரவை மதிப்பது போலப் பதிலளித்துவிட்டு, களத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் தவிர்த்ததால், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தற்போது கடுமையான சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது.

தற்போது உச்ச நீதிமன்றமே நேரடியாக அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளதால், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், இந்த விவகாரம் தமிழக அரசியலிலும், நீதிமன்ற வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+