திருப்பரங்குன்றத்தில் திமுகவின் அதே பாதையில் தவக.. உச்ச நீதிமன்ற உத்தரவைக்கூட மதிக்கல.. எல் முருகன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : உச்ச நீதிமன்ற உத்தரவைக்கூட மதிக்க மறுக்கிறதா தமிழக அரசு? திமுகவின் அதே பாதையில் பயணித்து, முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமையுடன் விளையாடுவதா? மதச்சார்பின்மை பேசிவிட்டு, ஒரு மதத்தின் வழிபாட்டு உரிமைக்கு மட்டும் முட்டுக்கட்டை போட நினைப்பது ஏன்? என முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எல் முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில்,"தமிழகத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்திலும், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் தனிச்சிறப்புடன் விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கார்த்திகை தீபத்தைத் தீபத்தூணில் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே மதிக்காமல் தமிழக அரசு செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

L Murugan Thiruparankundram

சட்டத்தின் ஆட்சியையும், நீதிமன்றங்களின் மாண்பையும் காப்பாற்ற வேண்டிய அரசே, நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டுவதும், பக்தர்களின் நியாயமான வழிபாட்டு உரிமைகளுக்குத் தடைகளை ஏற்படுத்துவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களின் நம்பிக்கைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் சமமாக மதிப்பதே தவிர, ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு உரிமைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பதல்ல. அனைத்து மதங்களுக்கும் சம உரிமை என்று பேசிவிட்டு, இந்து சமய பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகள் என்று வரும்போது மட்டும் பாரபட்சமாக நடந்துகொள்வது ஏன்?

முந்தைய திமுக அரசின் அணுகுமுறையையே தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசும் பின்பற்றுகிறதா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது. ஆட்சி மாறினாலும், பக்தர்களின் உரிமைகளைப் புறக்கணிக்கும் அணுகுமுறை மட்டும் மாறவில்லையா?

இன்று மாலை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் நடைபெற்ற விசாரணையின்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் சுட்டிக்காட்டிய இடத்தில் தீபம் ஏற்றாமல், நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி நீதிமன்ற உத்தரவுகளையும் அவமதிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் மாண்பையும், நீதித்துறையின் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டிய அரசே, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்படுவது எந்த வகையில் நியாயம்?

அதிகார பலத்தைக் கொண்டு பக்தர்களின் நம்பிக்கையை ஒடுக்கிவிடலாம் என்று தமிழக அரசு ஒருபோதும் நினைக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதும், மக்களின் அரசியலமைப்பு வழங்கியுள்ள வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாப்பதும் அரசின் அடிப்படைக் கடமையாகும்.

தனது வழிபாட்டு உரிமையும், ஆன்மீக மரபும் பறிக்கப்பட்ட காரணத்தினால் போராடிய பக்தர்கள் மீது சட்ட விரோதமாக ஒன்று கூடி உள்ளீர்கள் கலந்து செல்லாவிட்டால் லத்தி சார்ஜ் செய்வேன் என மிரட்டல் விடுப்பது வன்மையான கண்டனங்களுக்குரியது. முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், வழிபாட்டு உரிமையோடும் விளையாடுவதை தமிழக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்!. இறை நம்பிக்கைக்கு எதிரான அதிகாரப் போக்கை ஒருபோதும் ஏற்க முடியாது! உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத இந்த த.வெ.க அரசு நீதிமன்றத்திலும், முருகப்பெருமானிடத்திலும் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரவிருக்கிறது" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+