தவெக ஆட்சியை கவிழ்க்க சில ஐஏஎஸ் அதிகாரிகள் சதி! பெயரை கூட சொல்ல முடியும்! வாண்டடாக வந்த வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க சில ஐஏஎஸ் அதிகாரிகள் சதி செய்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அந்த ஐஏஎஸ் அதிகாரிகள் யார் யார் என்ற பெயரும் தனக்கு தெரியும், ஆனால் அதை சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "வைகோ இன் பார்லிமெண்ட்" (Vaiko in Parliament) என்ற நூல் மறுவெளியிட்டு (கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் ராகுல், அகிலேஷ் யாதவ் முன்பு வெளியானது) விழா நேற்று நடைபெற்றது.

vaiko mdmk

அதனை தொடர்ந்து கவிக்கடல் கண்ணதாசன் எனும் தலைப்பில் வைகோ சிறப்புரையாற்றினார். விழாவில் அமைச்சர் ராஜ்மோகன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். எங்களுக்கு ஆயுத உதவி செய்து தர வேண்டும் என பிரபாகரன் எனக்கு கடிதம் எழுதினார்.

விபி சிங்

பிரபாகரன் சார்பாக பாலசிங்கம் மூலம் எனக்கு கடிதம் எழுதினார். பிரபாகரன் எழுதிய கடிதம் குறித்து பிரதமராக இருந்த விபி சிங்கிடம் தனிமையாக சந்தித்து பேசினேன். என்னை மத்திய அமைச்சராக்க நினைத்தவர் VP சிங். அதை நான் மறுத்து, "நானே கட்சியில் சங்கடத்தில் உள்ளேன்.

அமைச்சரவையில் இடத்தை மறுத்த வைகோ

இந்த நேரத்தில் எனக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம்" என தெரிவித்துவிட்டு, சிங்களத்தில் ஆயுதம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆயுத உதவி செய்து தர வேண்டும் என VP சிங்கிடம் கோரிக்கை வைத்தேன்.

எனது கோரிக்கைக்கு விபி சிங் மறுத்தார்

அதற்கு VP சிங் மறுத்தார். "நான் கூட்டணி அரசாங்கத்தை நடத்தி வருகிறேன். என்னால் ஒருபோதும் முடியாது" என மறுத்தார். அதை தொடர்ந்து குறைந்தது மருத்துவ உதவியையாவது செய்து கொடுங்கள் என வலியுறுத்தினேன். அதற்கு ஒப்புக்கொண்டார்.

என் வீட்டில் பேரறிஞர் அண்ணா நீங்கலாக அனைத்து தலைவர்களும் சாப்பிட்டுள்ளார்கள். காமராசர், கக்கன், முத்துராமலிங்க தேவர், உட்பட அனைவரும் என் வீட்டில் என் தாய் செய்த சமையலை சாப்பிட்டுள்ளார்கள்.

விஎஸ் பாபு ஊர்வலத்தில் நடந்தது என்ன?

கருணாநிதி காலை வந்து வீட்டில் சாப்பிட்டு ஓய்வு எடுத்துவிட்டு மாலை சென்றார். VS பாபு இறுதி ஊர்வலத்தின் போது முதலமைச்சர் விஜய் அவர்களுடன் நடந்தேன். "உங்களால் நடக்க முடியுமா சார்" என விஜய் என்னிடம் கேட்டார்.

"இன்னும் 30 கிமீ கூட நடப்பேன்" என சொன்னேன். அப்போது பின்னால் இருந்து ஒருவர் என்னை தடுத்தார். அவர் அமைச்சர் என்றோ யார் என்றோ எனக்கு தெரியாது. எல்லா அமைச்சரையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

vaiko mdmk

12 கி.மீ. தொலைவு

என்னை தடுத்தவரை நோக்கி "உன் வேலையை பார்" என பதில் தெரிவித்துவிட்டேன். விஜய்யுடன் இறுதி ஊர்வலத்தில் 12 கிமீ தொலைவுக்கு நடந்ததை செய்தி போடாத ஊடகங்கள், அமைச்சரிடம் சண்டை போட்டார் வைகோ என செய்தி போடுகிறார்கள்.

வைகோ இன் பார்லிமெண்ட் ஆங்கில பிரதி வெளியீட்டு விழாவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அழைத்தேன். "என்னை விட்டுவிடுங்கள் என்னால் அங்கு வந்து பேச முடியாது" என விஜய் சொல்லிவிட்டார். "வைகோ இன் பார்லிமெண்ட் தமிழ் பிரதி வெளியிட்டுக்காவது வருவீர்களா" என விஜய்யிடம் கேட்டேன். "நிச்சயம் வருகிறேன்" என சொன்னார்.

அமைச்சரிடம் நான் எதையும் கேட்டதில்லை

இதையெல்லாம் அமைச்சர் ராஜ்மோகன் விஜய்யிடம் சொல்வார் என நம்புகிறேன். விஜய்யிடம் நான் அடிக்கடி பேசுவது இல்லை. முக்கியமான விஷயங்கள் மட்டும் தான் பேசுவேன். என் தனிப்பட்ட விஷயத்துக்காக எந்த அமைச்சரிடமும் நான் இதுவரை எதையும் கேட்டது கிடையாது.

ஐஏஎஸ் அதிகாரிகள் சதி

TVK ஆட்சி அமைந்ததும் நமக்கு வழக்கமாக வந்துகொண்டிருந்த மாமூல் வராததால் சில IAS அதிகாரிகள் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் பெயர் கூட என்னால் சொல்ல முடியும். ஆனால் அதை சொல்ல நான் விரும்பவில்லை. அது ஒரு போதும் நடக்காது.

தாணு பெயரை சொல்லி வைகோ உருக்கம்

திமுகவில் இருந்து என்னை தூக்கி எறிந்த போது நெஞ்சு உடைந்து நடுத்தெருவில் நான் நின்ற போது , எனக்கு கட்சி நடத்த அலுவலகம் நடத்த இடம் கொடுத்தவர் கலைப்புலி எஸ் தாணு. நன்றி உணர்வு என் ரத்தத்தில் கலந்து உள்ளது. அதனால் தான் நன்றி மறக்காமல் அவரை அழைத்து வந்துள்ளேன். என் கட்டை வேகிற வரை தாணு செய்த உதவியை நான் மறக்க மாட்டேன். இவ்வாறு வைகோ பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+