நவ.30-க்குள் பயிர்க்கடனை செலுத்தினால் புதிய கடன்.. வட்டியும் தள்ளுபடி.. விவசாயிகளுக்கு டபுள் நன்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளுக்கு முக்கியமான சலுகையை நம்முடைய அரசு மீண்டும் அறிவித்துள்ளது. ஆம், ஏற்கனவே கடன் தள்ளுபடி வாங்கியவர்கள், மிச்சமுள்ள கடன் தொகையை நவம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்தினால் வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்... இதன் மூலம் மீண்டும் புதிய பயிர்க்கடன் பெறவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சலுகையை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும், அவர்களின் முன்னேற்றத்திலும் தமிழக அரசு தொடர்ந்து, உதவி வருகிறது.. இப்போதுகூட, தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Crop Loan Waiver Tamil Nadu Farmers Cooperative Banks

பயிர்க்கடன் தள்ளுபடி

ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள், தங்களுக்கு கிடைத்த தள்ளுபடித் தொகையை தவிர்த்து மீதமுள்ள கடனை மட்டும் செலுத்த வேண்டும்... இந்த நிலுவைத் தொகையை நவம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்தினால், அதற்கான வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

இதனால் பழைய கடன் கணக்கை முடித்துவிட்டு புதிய பயிர்க்கடன் பெற முடியும். அடுத்த சாகுபடிக்கு பணம் தேவைப்படும் விவசாயிகளுக்கு இது உதவியாக இருக்கும்.

ரூ.5,190 கோடி கடன் சலுகை

தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 5 லட்சத்து 70 ஆயிரத்து 942 விவசாயிகளுக்கு ரூ.5,190 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது... இவ்வளவு பெரிய தொகையை விவசாயிகள் பயிர்க்கடனாக பெற்றுள்ள நிலையில், பழைய கடன் நிலுவையைச் செலுத்தி மீண்டும் கடன் பெறுவதற்கான வாய்ப்பை கூட்டுறவுத்துறை ஏற்படுத்தியுள்ளது.

சனி, ஞாயிறு லீவு இல்லை

நிலுவை கடனை செலுத்துவதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், விவசாயிகள் அவசரப்பட வேண்டிய நிலை உள்ளது. அதனால்தான் இதனை கருத்தில் கொண்டு விடுமுறை நாட்களிலும் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட உள்ளன. அதன்படி, நவம்பர் 28-ம் தேதி சனிக்கிழமை, நவம்பர் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் கூட்டுறவு கடன் சங்கங்கள் திறந்திருக்கும். இதனால் வேலை நாட்களில் சங்கங்களுக்கு செல்ல முடியாத விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எங்கே விவரம் கிடைக்கும்?

விவசாயிகள் தங்களது நிலுவைக் கடன் தொகை மற்றும் வட்டி தள்ளுபடி தொடர்பான விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மேலும், 98400 65423 என்ற வாட்ஸ்அப் உதவி எண் மூலமாகவும் தகவல்களை பெறலாம் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அதனால் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள் எஞ்சியுள்ள கடனைச் செலுத்தி இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

டபுள் நன்மைகள்

இந்த அறிவிப்பால் தமிழக விவசாயிகளுக்கு 2 வகையில் நன்மை கிடைக்கும். ஏற்கனவே வாங்கிய பயிர்க்கடனில் எஞ்சியுள்ள தொகையை செலுத்தும்போது அதற்கான வட்டி சுமை இருக்காது. பழைய கடன் கணக்கையும் முடித்துவிடலாம்.

அத்துடன் அடுத்த சாகுபடிக்கு தேவையான புதிய பயிர்க்கடனையும் பெற முடியும். விடுமுறை நாட்களிலும் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுவதால், வேலை நாட்களில் செல்ல முடியாத விவசாயிகளுக்கும் கூடுதல் வசதி கிடைத்துள்ளது. மொத்தத்தில், விவசாயிகள் பழைய கடன் சுமையைக் குறைத்து அடுத்த சாகுபடிக்கான நிதித் தேவையை சமாளிக்க இந்த அறிவிப்பு உதவியாக இருக்கும்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+