உச்சநீதிமன்றத்துக்கே மதிப்பில்லையா? சட்டத்திற்கு மேலானவரா முதல்வர் விஜய்? ஆர்பி உதயகுமார் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே புறந்தள்ளியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இன்றைக்கு புறந்தள்ளப்பட்டிருக்கிறது என்று சொன்னால், சட்டத்திற்கு மேலானவர்களாக தங்களைக் காட்டிக்கொள்கிறாரா முதல்வர்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," நடைபெற்றுக் கொண்டிருக்கிற தவெக அரசில், தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற முக்கியமான சட்ட ஒழுங்கு பிரச்சினைகளுக்கு மத்தியில், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அடாவடியான செயல்கள், தவெகவிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு தலை குனிவாகும்.

சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய செயலுக்கு தவெக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும், ஆட்சியர் புகார் தெரிவித்ததற்குப் பிறகும் அதை மிக ரகசியமாகக் கையாள வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் சந்தேகமாக இருக்கிறது.

RB Udhayakumar Slams Vijay

ஆர்பி உதயகுமார்

மற்றொன்று, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் துணை சபாநாயகர் ரவிசங்கர், தன்னிடம் மனு கொடுக்க வந்தவரை அடித்து விரட்டிய காட்சிகள் காணொளி வாயிலாக வெளியாகி, தவெக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த 2 நிகழ்வுகளும் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பதவியின் மாண்பை மறந்து,
மிகவும் கீழ்த்தரமான முறையில் அப்பட்டமான சட்ட விதி மீறல்களில் ஈடுபட்டு சட்டத்தை காலில் போட்டு மிதித்திருக்கின்றனர்.

தேசிய மகளிர் ஆணையம்

ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாக நடந்திருப்பதை அனைத்து கட்சித் தலைவர்களும் எல்லோரும் கண்டித்தார்கள். தேசிய மகளிர் ஆணையமே விளக்கம் கேட்கும் அளவுக்கு தமிழகப் பெண்களின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே இந்தச் சம்பவம் அமைந்திருக்கிறது. ஆனாலும் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கவில்லை என்று 3 அமைச்சர்கள் முட்டுக் கொடுத்தார்கள். புகார் வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று. அமைச்சர்கள் அந்த அளவுக்கு சட்டத்தை மீறுபவர்களை காப்பாற்றுவதற்கு அவசியம் என்ன?

முதல்வர் விஜய்

தவெக ஆட்சியின் பெரும்பான்மைக்காக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குகிறாரா? முதல்வர் விஜய். உங்கள் மாமன், உங்கள் குழந்தை, உங்க அண்ணன், உங்க பிள்ளை ஆட்சி நடக்குதுன்னு சொன்னார். உங்க பிள்ளை ஆட்சின்னு சொல்லிட்டு இப்படி பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை. பச்சிளம் குழந்தையிலிருந்து பாட்டி வரை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. ஒரு டீக்கடையிலே போய் குடிப்பதற்கு, டீ குடிப்பதற்குக்கூட சட்டம் ஒழுங்கு இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று கடந்த ஆட்சியை பற்றி விஜய் சொன்னார்.

காவல்துறை

ஆனால் அவருடைய ஆட்சியில் அவரின் அதிகாரத்திற்கு கீழ் அவருடைய காவல்துறையில் இப்படி நடப்பது போது எங்க நடக்கவில்லை. திறமையான காவல்துறை அதிகாரிகள் நம்மிடம் இருக்கிறார்கள். இங்கிலாந்து, ஸ்காட்லாந்துக்கு நிகரான காவல்துறை நம்முடைய காவல்துறை. ஆகவே அதை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் தடுமாறுகிறது தவெக அரசு.

கார்த்திகை தீபம்

தமிழகம் முழுவதும் பரபரப்பாக நேற்று கார்த்திகை தீபத் திருநாள் நிறைவு செய்திருக்கிறது. தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பதட்டம் தொட்டிக்கொண்டிருந்தது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் நவம்பர் 20ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் மிகத் தெளிவாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என்றது.

உச்ச நீதிமன்றம்

இந்த உத்தரவு இறுதித் தீர்ப்பு அல்ல என்றும், இதை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான உரிமையாகவோ, பாரம்பரிய வழக்கத்திற்கான ஆதாரமாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிற நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, தமிழக அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்திருப்பதோடு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு செயல்படவில்லை. நீதி அரசர்களின் தீர்ப்பை காற்றிலே பறக்க விட்டிருக்கிறது இதை நாம் எப்படி பார்ப்பது?

தவெக அரசு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே புறந்தள்ளியிருக்கிறார்கள். சட்டத்திற்கு மேலானவர்களா ஆட்சியாளர்கள்? சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆகவே இன்றைக்கு தவெக அரசு உச்ச நீதிமன்றத்தின் அவமதிப்புக்கு ஆளாயிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இன்றைக்கு புறந்தள்ளப்பட்டிருக்கிறது என்று சொன்னால், இன்றைக்கு சட்டத்திற்கு மேலானவர்களாக தங்களைக் காட்டிக்கொள்கிறாரா முதல்வர்? மாண்புமிகு நீதி அரசர்களுக்கே தமிழ்நாட்டு மக்களுக்கே வெளிச்சம், ஆண்டவனுக்கே வெளிச்சம்" என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+