ஏதாவது பண்ணு.. கள்ளக்குறிச்சி அருளை கைகழுவிய புஸ்ஸி.. ரிசைன் பண்ண சொல்லட்டுமா? விசாரித்த விஜய்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகார த்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ். இவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன் சம்மனும் கொடுக்கப்பட்டுள்ளனர்.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷுக்கு எதிரான விசாரணையை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

Kallakurichi

விசாரணையை தொடங்கிய அதிகாரி

மேலும், இந்த விசாரணையைச் சென்னை நிர்வாகப் பிரிவு ஐஜி என். காமினி ஐ.பி.எஸ். நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையில் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்ற இளம் ஐ.பி.எஸ். அதிகாரியான சிருஷ்டி சிங், 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியாவார். எவ்வித அரசியல் அழுத்தத்திற்கும் அஞ்சாமல் நேர்மையாகவும் வேகமாகவும் விசாரணை நடத்துவார் என்ற நற்பெயரைப் பெற்றவர்.

அமைச்சர் புஸ்சி ஆனந்திடம் ஆலோசனை

சம்மனுக்கு ஆஜராகும் போது, அவர் கைது செய்யப்படுவார் என்கிறார்கள். ஜாமீனின் வெளிவரமுடியாத 5 செக்சன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகலாமா? என்று எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், அமைச்சர் புஸ்சி ஆனந்திடம் ஆலோசனைக் கேட்டுள்ளார்.

அதற்கு, நீ எதை வேண்டுமானாலும் செஞ்சுக்கப்பா... எனக்கு எந்த யோசனையும் சொல்லத் தெரியாது. நான் ஏதோ சொல்லப்போய், அது எனக்கே வில்லங்கம்மா முடிஞ்சிடப் போகுது. முன் ஜாமீன் கேட்டாலும் கிடைக்காது. எதுக்கும் உங் வக்கீல் கிட்டே கலந்து பேசு என அட்வைஸ் சொல்லி ஒதுங்கிக் கொண்டா ராம். கட்சியே நம்மை கைவிட்டு விடுமோ என்று கவலையிலும், பயத்திலும் இருக்கிறாராம் எம்.எல்.ஏ.

கோபத்தின் உச்சிக்கே போன புஸ்சி ஆனந்த்

இதற்கிடையே, கைது செய்யப்படுவதற்கு முன்பு, கட்சி பதவியிலிருந்து எம்.எல்.ஏ.வை நீக்கி விடலாம் என்று முதல்வர் விஜய்யிடம் சொல்லியுள்ளார் புஸ்சி ஆனந்த். இது குறித்து ஆலோசகர்களிடமும் அரசு தலைமை வழக்கறி ஞரிடமும் விவாதித்திருக்கிறார் விஜய். இந்த நிலையில், தம்மிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டால், எம்.எல்.ஏ. பதவியையும் ரிசைன் பண்ணிடுவேன் என சொல்லி வருகிறாராம் அருள் விக்னேஷ்.

முதல்வர் விஜய்யும் கூட மிகுந்த கவலையில் இருக்கிறார் என்கிறார்கள். குறிப்பாக, ஆலோசகர்களிடம் அவர் பேசும் போது, கள்ளக்குறிச்சியும் திருப்பரங்குன்றமும் நமக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்து விட்டது. அருண் விக்னேஷிடம், எம்.எல்.ஏ. பதவியை ரிசைன் பண்ண சொல்லி டலாம்னு தோணுது. அப்படி ரிசைன் பண்ணினா எத்தனை இடைத்தேர்தல் களைத்தான் சந்திப்பது? கலெக்டருக்கு தொல்லைக் கொடுத்துள்ள விசயம், இடைத்தேர்தலில் நமக்கு நெகட்டிவாக போகுமா? என்று கவலையுடன் விசாரித்திருக்கிறார் விஜய்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+