உச்சநீதிமன்றத்தை விட உயர்ந்தவரா நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்? பாயிண்ட்டை பிடித்து கேட்ட பெ.சண்முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் தீப விஷயத்தில், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். குறிப்பாக உச்சநீதிமன்றத்தை விட ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர்ந்தவரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசியிருப்பதாவது, "திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு கலவரத்தை உண்டாக்குவதற்காக பாஜக, RSS, இந்துத்துவா கும்பல் முயன்று வருகிறது.

GR Swaminathan

கார்த்திகை தீபம் வழக்கம்

இதுவரை கார்த்திகை தீபம் என்பது ஒரு நாள் விழாவாக, அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல்தான் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை பிரச்சனையாக்கி, அதை நாடு தழுவிய பிரச்சனையாகவும், இந்துக்களுக்கு எதிரானதாக தமிழ்நாடு அரசு இருக்கிறது என்பதை போலவும் தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் மதவெறியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய பிரச்சனை

கடந்த ஆண்டும் இந்த ஆண்டு போலவே பிரச்சினையை நீதிமன்றத்தின் மூலமாக அவர்கள் ஏற்படுத்தினார்கள். அப்போது இருந்த திமுக தலைமையிலான அரசு, நீதிமன்றம் தவறான முறையில் உத்தரவுகளை பிறப்பித்தாலும்.. வழக்கமாக தீபம் ஏற்றுதல் இடத்தில் தீபத்தை ஏற்றுவது என்று, பக்தர்களின் உணர்வுகளை மதித்தும், மக்களுடைய உணர்வுகளை மதித்தும்.. கடந்த ஆண்டு வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு

கடந்த ஆண்டு வழக்கினுடைய தொடர்ச்சியாக.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, கடந்த 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு தவறான தீர்ப்பை அளித்தது. அங்கே இருக்கக்கூடிய அளவை கல்லில், தீபத்தூன் என்று பெயர் புதிய பெயர் சூட்டி.. அதிலே தீபத்தை இந்த ஒரு முறை மட்டும் ஏற்ற வேண்டும் என்கிற ஒரு தீர்ப்பை அவர்கள் வழங்கினார்கள்.

தொல்லியல் துறையோ.. அது அளவைகள் தான் தீபத்தூண் அல்ல என்று தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், எதற்காக? உச்ச நீதிமன்றம் இப்படி தவறான ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பது.. மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்படுகிற இடம், அந்த கோவிலினுடைய ஆகம விதிகள், அங்கே இருக்கக்கூடிய அறங்காவலர் குழு.. இதுதான் தீபத்தை ஏற்றுகிற பணியில் பல நூறு ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் மரபுகள்

இப்படி இருக்கையில் அறங்காவலர் குழுவுக்கு சம்பந்தமில்லாமல், யாராரோ கோருகிறார்கள் என்பதற்காக.. நீதிமன்றம் தவறான உத்தரவுகளை பிறப்பித்திருப்பது மிக மிக தவறானது. ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியாக ஆகம விதிகளும், பழக்க வழக்கங்களும், மரபுகளும் தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் தீபத்தை பொறுத்தவரை, உச்சிப் பிள்ளையார் கோயிலில் உள்ள மண்டபத்தில் ஏற்றுவது என்பதுதான் இதுவரைக்கும் கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதை தான் இப்போதும் தமிழ்நாடு அரசாங்கம், மக்களுடைய உணர்வுகளுக்கும், மரபுகளுக்கும் மதிப்பளித்து நேற்றைய தினம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த வகையில் இப்போது இருக்கக்கூடிய தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுகள்.

மீண்டும் மீண்டும் விசாரணைக்கா?

நேற்றைய தினம், தானாக முன்வந்து யாரோ ஒருவர் வழக்கு கொடுத்து.. அதை நான்தான் விசாரிப்பேன் என்கிற முறையில், மாண்புமிகு நீதி அரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னால் மீண்டும் தீபம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

நான் என்ன கேட்க விரும்புகிறேன்னா.. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு, மீண்டும் மீண்டும் ஒரே நீதிபதியிடம் விசாரணைக்கு எப்படி வருகிறது? இதற்கான விளக்கத்தை தலைமை நீதிபதி தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

ஜி.ஆர்.சுவாமிநாதன் மட்டும்தான் நீதிபதியா?

அவர் மட்டும்தான் நீதிபதியா? திரும்பத் திரும்ப.. கோயில் தொடர்பான விவகாரங்கள் இவரிடமே வருகிறது? தீபம் வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டு.. அந்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிற நிலையில், அதே நீதிபதி மீண்டும் இந்த வழக்கு விசாரிப்பது என்பதெல்லாம் மக்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அப்படி என்றால் தனி அதிகாரம் படைத்த ஒருவர் என்பதைப் போல.. நீதிபதி சுவாமிநாதன் நடந்து கொண்டிருப்பதை எந்த விதத்தில் புரிந்து கொள்வது?

நீதிமன்றத்தை விட அதிகாரம் கொண்டவரா நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்?

மாவட்ட ஆட்சியருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அறங்காவலர் குழு தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். நிறைவேற்றவில்லை என்று சொன்னால்.. பதில் அளிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்திற்கு தவிர, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது? அப்படியெனில் உச்ச நீதிமன்றத்தை விட உயர்ந்தபட்ச அதிகாரம் கொண்டவரா நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்? என்கிற இயல்பான கேள்வி எழுகிறது.

நீதிபதிகள் சட்டத்துக்கு உட்பட்டு, ஆதார ஆவணங்களின் அடிப்படையில் செயல்பட வேண்டுமே தவிர.. தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில், தன்னுடைய சொந்த கருத்துக்களை, நம்பிக்கைகளை.. தீர்ப்பின் மீது திணிப்பது என்பது தவறான தீர்ப்பாகத்தான் அமையும். ஆகவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் நேற்றைய அத்துமீறல் சம்பந்தமாக.. தலைமை நீதிபதி உரிய விசாரணை மேற்கொண்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்." என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+