Rahu ketu peyarchi: பிரம்மாண்ட வீடு வாங்கும் யோகம்.. துலாம் ராசியினரே இந்த விஷயத்தில் கவனம்
Rahu ketu peyarchi 2026: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களில் இந்தப் பெயர்ச்சியானது துலாம் ராசியின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியினருக்கு சுத்திகரிப்பு நிலையம், அனலிடிக்ஸ், சட்ட வல்லுநர்கள், டெஸ்டிங் லேப், நீர் சார்ந்த தொழில், ஆன்மீகத்தில் இருப்பவர்கள் அற்புதமான வெற்றியைப் பெறுவீர்கள். கேது 10 ஆம் இடத்திற்கு வரும்போது இருக்கின்ற தொழிலை விட்டு விட்டு புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். தொழிலில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும். அந்த மாற்றம் நல்ல மாற்றமாக இருக்கும்.

பிரம்மாண்ட வீடு யோகம்
மாமியாரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் மூத்த பெண்களால் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். உற்பத்தி சார்ந்த தொழில் செய்வோர்கணிதம், இயற்பியல் ஆசிரியராக இருப்பவர்கள் மாறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. 4 ஆம் இடத்தில் இருக்கும் ராகுவால் பிரம்மாண்டமான வீடு வாங்குவதற்கான யோகம் ஏற்படும்.
கண் திருஷ்டி
பிள்ளைகளைப் பிரியும் அமைப்பு உள்ளது. பிள்ளைகள் வெளிநாடு போவது, பிள்ளைகளின் படிப்புக்காக நீங்க வெளியில் செல்வது, அல்லது பிள்ளைகளுக்காக கணவரை விட்டு விட்டு செல்லும் சூழல் போன்றவை ஏற்படும். ரத்தபந்த உறவுகள் உங்களைப் பார்த்து கண் திருஷ்டி வைப்பார்கள். நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
கழுத்து வலி, சுழுக்கு, நெஞ்சு சளி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தூசி படுவதைத் தவிர்ப்பது நல்லது. குளிர்ச்சியான பொருள்களை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டை சுத்தம் செய்து கொள்வது நன்மை பயக்கும். பொருளாதாரத்தில் அபாரமான மாற்றம் ஏற்படும். பண வரவு அபரிமிதமாக இருக்கும். தாய்க்கும், உங்களுக்கும் தகராறு வந்து கொண்டே இருக்கும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் பிரச்சனை இருக்காது. ஆனால், புது இடத்திற்கு செல்வதால் சந்தோஷத்திற்கு மட்டும் சிறிது குறைவு ஏற்படும். சந்தோஷம் 75 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 95 சதவீதமும் அற்புதமாக இருக்கும். திருஷ்டி துர்கா ஹோமத்தை வீட்டில் செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். துர்க்கை அம்மன் படம், கண் திருஷ்டி விநாயகர் படத்தை வீட்டில் வைப்பது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications
