கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்ய வேண்டியது இல்லை! கார்த்தி சிதம்பரம்.. சொன்ன காரணத்தை பாருங்க
சென்னை: பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி வழக்கில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். எல்லாவற்றிலும் கைது பண்ண வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என அவர் கூறியுள்ளார்.
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்ய அவசியம் இல்லை
விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்பன் அனுப்பி உள்ள நிலையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வாடிக்கையாக கடைப்பிடிக்க வேண்டிய, பின்பற்ற வேன்டிய சம்பிரதாயங்கள் நடந்தது. புதியதாக சம்பிரதாயங்களை புகுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதேதான் தமிழக அரசின் விலை. இந்த அரசாங்கம் மட்டும் இல்லை, கடந்த அரசாங்கத்தின் நிலையும் அது தான். அந்த நிலை தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் யாருக்கும் எந்த தடையும் இல்லை.
எங்கள் வீட்டிலும் விளக்கு ஏற்றினோம்
அவங்களுடைய மத பழக்கங்களையோ, வழிபாட்டு பழக்கங்களையோ பின்பற்றுவதற்கு யாருக்கும் எந்தவிதமான தடையோ, அச்சுறுத்தலோ கிடையாது. ஆனால் வாடிக்கையாக பொது கோவில்களில், தேவாலயங்களில், வழிபாட்டு தலங்களில் காலங்காலமாக நடக்க வேன்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுகின்றன. நேற்று திருவண்ணாமலையில் விளக்கு ஏற்றப்பட்டது. எல்லார் வீட்டிலும் ஏற்றினார்கள். எங்கள் வீட்டிலும் விளக்கு ஏற்றினோம். இது தான் காலம் காலமாக பின்பற்றப்படுகின்றன.
அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றால்
எல்லாவற்றிலும் கைது பண்ண வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நம்ம ஊரில் தொட்டதுக்கு எல்லாம் கைது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம்முடைய நீதித்துறை சிஸ்டத்தில் தேவையின்றி கைது நடக்கிறது. ஒருத்தர் வந்து இன்னொருத்தருக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் அல்லது சாட்சியை கலைப்பார்கள் என்று நினைத்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும் தவிர அவர் வெளியே இருப்பதனால் இன்னொருத்தரின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து இல்லை என்று காவல்துறை நினைத்தால் அவரை கைது செய்ய வேண்டாம்.
டிவிகேவுக்கு அனுபவம் இல்லை
எல்லா வழக்குகளிலும், எல்லாரையும் கைது செய்வது என்பது என்னை பொறுத்தவரை தேவையில்லாத விஷயம். பெரும்பாலான வழக்குகளில் போலீசார் கைது செய்யாமல் விசாரணை நடத்தி அதில் வழக்கு இருந்தால் சார்ஜ் ஷீட் பதிவு செய்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர வேன்டும்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை காவல்துறையினர் செய்வார்கள். இந்த செய்தி கசியும்போதே ஏன் அரசும், சட்டமன்ற உறுப்பினர் சம்பன்ந்தப்பட்ட கட்சியும் கையில் எடுத்து இவ்விகாரத்தில் முற்றுப்புள்ளி வைத்து இருக்க வேண்டும். இந்த கட்சிக்கு இதில் அனுபவம் இல்லை. இப்போது தான் சவால்களை சந்திக்கிறாங்க. இதை எப்படி கையாள வேண்டும் என தெரியாது. இந்த மாதிரி சம்பவம் நடந்தால் முன் கூட்டியே கன்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என்று கூறினார்.




Click it and Unblock the Notifications
