ரயில்வே ஸ்டேஷன்களில் ஜங்சன், சென்ட்ரல் என முடிவது ஏன் தெரியுமா? பின்னணியில் இருக்கும் கோட் வேர்டு
சென்னை: ரயில்களில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் ஒரு விஷயத்தை கவனித்து இருக்க முடியும். அதாவது ரயில் நிலையங்களுக்கு ஒரே மாதிரியாக பெயர்கள் இருக்காது. உதாரணத்திற்கு நெல்லை ஜங்ஷன், திருவனந்தபுரம் சென்ட்ரல், சென்னை செண்ட்ரல், மதுரை ஜங்சன் என்று பெயர்களை பார்த்து இருப்போம்.
மதுரை ரயில் நிலையம் என்றோ, நெல்லை ரயில் நிலையம் என்று சொன்னால் கூட இன்னும் எளிதாக மக்களுக்கு புரிந்துவிடுமே? பிறகு எதற்காக ஜங்ஷன், சென்ட்ரல், டெர்மினல் என்று பெயர்களை இணைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி சிலருக்கு எழலாம். இதற்கு பின்னால் காரணம் இல்லாமலும் இல்லை. அது என்னவென்று இங்கே விரிவாக பார்க்கலாம்.

சென்ட்ரல் வார்த்தை எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
சென்ட்ரல் என்ற பெயர் பெருநகரங்களில் உள்ள மிகப்பெரிய ரயில் நிலையங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான பயணிகளை இந்த ரயில் நிலையங்கள் கையாளும். தொலைதூரங்களுக்கு ரயில்கள் இங்கிருந்து புறப்பட்டு செல்லும். பிரிமியம் ரயில்கள், மாநிலங்களுக்கு இடையே செல்லும் ரயில்கள் இத்தகைய ஸ்டேஷன்களில் இருந்து புறப்பட்டு செல்லும். உதாரணத்திற்கு கான்பூர் சென்ட்ரல், சென்னை செண்ட்ரல், மும்பை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களை சொல்லலாம்.
ஜங்ஷன் வார்த்தை எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரயில்வே லைன்கள் சந்திக்கும் ஸ்டேஷன்கள் ஜங்சன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் போக்குவரத்தில் முக்கிய சந்திப்பு மையமாக இத்தகைய ரயில் நிலையங்கள் உள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்களை இயக்குவதற்கும், பயணிகள் தங்களது டிரவல் ரூட்களை மாற்றிக்கொள்வதற்கு முக்கிய ரயில் நிலையமாக இந்த ஜங்சன் ரயில் நிலையங்கள் உள்ளன. இத்தகைய ரயில் நிலையங்களில், பல பிளாட்பார்ம்களை கொண்டதாகவும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு ரயில்கள் வந்து செல்லும் இடமாகவும் இருக்கும்.
டெர்மினல் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
டெரிமினஸ் என்பதன் அர்த்தம் என்னவென்றால் ரயில் இங்கிருந்துதான் தனது பயணத்தை தொடங்கும் அல்லது பயணத்தை நிறைவு செய்யும் இடமாக இருக்கும். இத்தகைய ரயில் நிலையங்களுக்கு ஒரு பக்கம் தொடர்ந்து செல்லும் ரயில் பாதைகள் இருக்காது. அதிக எண்ணிக்கையில் ரயில்கள் புறப்படும் ஸ்டேஷன்கள் டெர்மினல் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு அதிகப்படியான பராமரிப்பு பணிகளும் நடைபெறும். பல ரயில்கள் அந்த ஸ்டேஷன்களில் இருந்துதான் தனது பயணத்தை துவங்கவும் முடிக்கவும் செய்யும்
கண்டோன்மெண்ட்
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், ராணுவ குடியிருப்புகளுக்கு அருகில் இருந்த ரயில் நிலயங்களுக்கு இப்படியான பெயர் வைக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் எளிதாக கிளம்பி செல்லவும், தளவாடங்களை எடுத்து செல்லவும் இந்த ரயில் நிலையங்கள் பயன்பட்டன. ஆனால் தற்போது கண்டோன்மெண்ட் ரயில் நிலையங்களும் பயணிகள் சேவைக்காக பயன்படுத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications
