ஷார்ஜா ஆட்சியாளர் பற்றிய முதல் தமிழ் நூல்: துபாயில் ‘ஷார்ஜாவின் சிற்பி’ சிறப்புக் கலந்துரையாடல்!
துபாய்: அண்மையில் நடைபெற்ற 45-வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில், எழுத்தாளர் முதுவை ஹிதாயத் எழுதிய 'ஷார்ஜாவின் சிற்பி - மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி' என்ற நூல் வெளியிடப்பட்டது. ஷார்ஜா ஆட்சியாளரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் முதல் தமிழ் நூலான இதனைப் பற்றிய சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி, துபாய் தர்பார் ஊடக நிறுவனம் சார்பில் துபாயில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த துபாய் தர்பார் தலைவர் முஹம்மது கபீர், இலக்கிய ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் இனி ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற இலக்கியக் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றார்.

துபாய் அல் ரீம் குழுமத் தலைவர் செய்யது அபுதாஹிர், கவிஞர் நூர் பாத்திமா மற்றும் அமீரக இந்திய நல வாழ்வு பேரவையின் துணைத் தலைவர் ஆகியோர் பேசும்போது, தனது முதல் நூலிலேயே ஒரு சிறந்த தலைவரின் வரலாற்றைத் தமிழில் படைத்துள்ள முதுவை ஹிதாயத்தை மனதாரப் பாராட்டினர். தொடர்ந்து எழுத்தாளர் வினோத் சேகர், நவாஸுதீன், இலங்கை தமிழ் மாறன் ஆகியோரும் நூலின் சிறப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நிறைவாக ஏற்புரை நிகழ்த்திய நூலாசிரியர் முதுவை ஹிதாயத், நூல் உருவாக உதவிய அனைவருக்கும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சபீக், ஹுசைன், காயத்ரி, சமீர் அடங்கிய துபாய் தர்பார் குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.







Click it and Unblock the Notifications
