"நாங்க ஒன்னும் பிச்சை கேட்கல..!" 26 சீட் தருவதாக சொன்ன அகிலேஷ்.. கடுங்கோபத்தில் காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: "கூட்டணி என்றால் அதில் பங்காளிகள் இருக்க வேண்டும்; பிச்சைக்காரர்கள் அல்ல. நாங்கள் யாரிடமும் பிச்சை கேட்கவில்லை" என்று சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் கடுமையாகப் பேசியுள்ளார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கெனவே மோதல் நீடித்து வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருப்பது காங்கிரஸை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியை அமைத்துள்ளன. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், முதலில் எல்லாம் சுமுகமாகவே செல்வதாக கூறினார்கள். ஆனால் சில நாட்களில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

Congress Akhilesh Yadav Uttar Pradesh elections

26 சீட்கள் தான் முடியும்

அதாவது கூட்டணியில் 170 முதல் 180 தொகுதிகள் வரை வேண்டும் என்று முதலில் காங்கிரஸ் கேட்டிருந்தது. பின்னர் தனது கோரிக்கையை சுமார் 130 தொகுதிகளாக குறைத்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமாஜ்வாதி கட்சி வெற்றி வாய்ப்புள்ள 26 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டது.

இந்த சூழலில், காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படுவதற்கு முன்பே சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இதுவே காங்கிரஸ் தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாதி அறிவித்த 5 தொகுதிகளில், மேற்கு உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள பெஹட், சஹாரன்பூர் ஆகிய தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பினர். அப்படியிருக்கும்போது திடீரென வேட்பாளர்களை அறிவித்தது சர்ச்சையாகியுள்ளது.

காங்கிரஸ்

கடந்த 2022 சட்டசபை தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சியே வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும் வெறும் 2,800 வாக்குகளையே பெற்றிருந்தது. இருப்பினும், சஹாரன்பூர் லோக்சபா தொகுதி எம்பியாக இருக்கும் இம்ரான் மசூத், காங்கிரஸால் வெல்ல முடியும் என்றும் இதனால் இரு தொகுதிகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இங்கு முஸ்லிம், தலித் வாக்காளர்கள் கணிசமாக இருப்பதால், அந்த வாக்குகள் தங்களுக்கு வரும் என காங்கிரஸ் தரப்பு சொல்கிறது.

அகிலேஷ் யாதவின் திடீர் வேட்பாளர் அறிவிப்பால் கடும் கோபத்தில் இருக்கும் காங்கிரஸ் செயல் தலைவர் இம்ரான் மசூத் இது தொடர்பாக இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தொகுதி பங்கீடு முடிவாகும் முன்பே சமாஜ்வாதி வேட்பாளர்களை அறிவித்தது கூட்டணி பேச்சுவார்த்தையின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குவதாக கூறினார்.

பிச்சைக்காரர்கள் இல்லை

அவர் மேலும், "கூட்டணிக் கட்சிகளுடன் மோதுவதால் என்ன கிடைக்க போகிறது? இதனால் பாஜகவுக்கு தான் லாபம். இப்படியெல்லாம் செய்துவிட்டு, இதை கூட்டணி என்று சொல்ல முடியுமா? கூட்டணியில் பங்காளிகள் இருக்க வேண்டும்; பிச்சைக்காரர்கள் அல்ல. நாங்கள் எதற்காகவும் பிச்சை கேட்கவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரை நாங்கள் எவ்வளவு சீட் வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. அதற்குள் வேட்பாளர்களை அறிவித்தால் எப்படி? பாஜகவை எதிர்கொள்ளும் ஒரே நம்பிக்கையாக ராகுல் காந்தி இருக்கிறார். நாட்டில் வேறு யாராலும் அந்த அளவுக்கு பாஜகவை எதிர்கொள்ள முடியாது" என்றார்.

அகிலேஷ் யாதவ்

காங்கிரஸின் அதிருப்தியை உணர்ந்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், நேற்றைய தினம் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் பாஜகவை தோற்கடிப்பதற்கான வரலாற்று வாய்ப்பை இரு கட்சிகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், எத்தனை தொகுதிகள் என்பதை விட வெற்றி வாய்ப்புக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஏற்கெனவே பேசப்பட்ட 26 தொகுதிகளை தாண்டி, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் மற்ற தொகுதிகளின் பட்டியலையும் தருமாறும் அகிலேஷ் கேட்டுள்ளார். இரு கட்சிகளும் இணைந்து ஆலோசித்து, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் வேட்பாளர்களையும் முடிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளுமே போட்டியிட விரும்பும் தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா இரண்டு வேட்பாளர்களை பரிசீலித்து, யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை முடிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+