அள்ள அள்ள பணம்.. தனுசு ராசிக்கு ராகு கேது தரும் மெகா ஜாக்பாட்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
Rahu ketu peyarchi 2026: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. நிழல் கிரகங்களில் இந்தப் பெயர்ச்சியானது தனுசு ராசியின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு பணம் பல வகைகளில் வந்து சேரும். குடும்ப ஸ்தானத்தில் ராகு வந்து அமர்கிறார். உங்களுடைய பேச்சு அற்புதமாக இருக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பண வரவு அற்புதமாக இருக்கும். அஷ்டமத்தில் கேது வந்து அமருகிறார். கிட்னி செயல்பாசு, ஹெர்னியா, பெண்கள் தொப்புள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்
பெரியவர்களைப் பிரிவதற்கான சூழ்நிலை ஏற்படும். அம்மாவின் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள், உறவுகளில் பிரச்சனைகள், விரிசல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அம்மா, பாட்டி, பெரியம்மா உள்ளிட்ட உறவுகளின் ஆரோக்கியத்தில் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளது. போலியான விஷயங்களைக் கண்டு ஆசைப்படக் கூடாது.
கவனம்
போலியான விஷயங்களை நம்புவது, பண விஷயங்களில் சிக்குவது போன்ற அமைப்பு உள்ளது. கோர்ட், கேஸ் தொடர்பான விஷயங்களை பேசித் தீர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பணம், பொருளாதாரம் அற்புதமாக இருக்கும். 2, 6, 10க்கு உரிய பாவகங்கள் இயக்கம் இருப்பதால் பெரிய பாதிப்புகள் இருக்காது.
குருவின் அருள்
குரு பகவானின் மாற்றமும் ஏற்படுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். பல் சார்ந்த பிரச்சனைகள், அதனை எடுக்கும் அமைப்பு ஏற்படும். கலப்புத் திருமணங்கள் வீட்டில் ஏற்படும். இரவு நேரத்தில் தேவையில்லாத எண்ணம், தூக்கமின்மை ஏற்படும். மருத்துவச் செலவுகளை செய்து கொண்டே இருக்கும் சூழல் ஏற்படும். 10 சதவீதமாவது பண விரயம் உண்டாகும். ஆனால், அவை மருத்துவம் சார்ந்த செலவுகளாக இருக்கும்.
செட்டிலாகப் போறீங்க
செட்டிலாகும் யோகம் ஏற்படும். சந்தோஷம் ரீதியாக 75 சதவீதம் நன்றாக இருக்கும். பண வரவு 95 சதவீதம் அற்புதமாக இருக்கும். அஷ்டமத்தில் சந்திரன் வீட்டிற்கு கேது வந்து அமர்வதால், விநாகர் வழிபாடு செய்வது, அபிஷேகம் செய்வது, உச்சிஷ்ட மஹாகணபதியே நமஹ என்ற ஜெபத்தை தினந்தோறும் 21 முறை சொல்வது நன்மை பயக்கும். ஒன்றரை ஆண்டுகளுக்கு தினந்தோறும் ஜெபித்து வருவது மாற்றத்தைத் தரும். உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications
