நம்பவே முடியாத சரிவு.. இந்தியன் வங்கியில் தங்க நகைக்கடன் ஒரு கிராமுக்கு இன்று எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தின் விலை கடுமையாக சரிந்துவிட்டது. எனவே, இந்தியன் வங்கியில் தங்க நகைக்கடன் குறித்து விசாரிக்கச் சென்றபோது ஆச்சரியமான விஷயங்களைக் இன்று காண முடிந்தது. நகைக்கடன் வாங்குவதற்கு பெரிய அளவில் கூட்டம் இல்லை. ஆனால், தங்க நகைக்கடன் வாங்குவதற்கு ஓரளவு மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். நகைக்கடன் கிராமிற்கு எவ்வளவு என்று விசாரித்தபோது, ஒரு கிராமிற்கு அக்ரி என்றால் ரூ.8,300 தருவதாகக் கூறினார்கள். அதுவும் 916 நகைகளுக்கு மட்டும்தான். அக்ரி இல்லை என்றால் எவ்வளவு என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன தொகைதான் ஷாக் தந்தது.

தங்க நகைக்கடனைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு, தங்கத்தின் விலை இப்போது என்ன, ஏன் தங்கத்தின் விலை குறைந்தது, தங்க நகைக்கடனுக்கு ஒரு கிராமிற்கு இப்போது எவ்வளவு தருகிறார்கள் என்பதை வரிசையாகப் பார்த்துவிடுவோம்.

gold loan

முதலில் தங்கத்தின் விலையைப் பார்த்தோம் என்றால், கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது, வரலாறு காணாத அளவிற்குச் சரிந்து வருகிறது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட உள்ளதாக எதிர்பார்ப்புகள் உள்ளதால், தங்கத்தின் விலை கடந்த 9ஆம் தேதியில் இருந்து கடுமையாகக் குறைந்து வருகிறது.

தங்கம் விலை சரிவு

கடந்த 9ஆம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை தினந்தோறும் இறங்கி வந்த நிலையில், 11 மாதங்களுக்குப் பிறகு, முதல் முறையாக கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்குக் கீழ் இறங்கியது. அதன்பிறகும் தங்கத்தின் விலை கடுமையாகச் சரியத் தொடங்கியது. ரூ.92 ஆயிரம் என்கிற அளவில் சரிந்தது. ஆனால், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினமும் சற்றே அதிகரித்தது. நேற்றும் தங்கத்தின் விலை அதிகரித்தது. ஆனால், இன்று (நவம்பர் 25) தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாகக் குறைந்துள்ளது.

தங்கம் விலை எவ்வளவு?

அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.295 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,420-க்கு விற்பனை ஆனது. அதேபோல், ஒரு பவுனுக்கு ரூ.2,360 குறைந்து, ஒரு பவுன் ரூ.91,360-க்கும் சென்னை நகைக்கடைகளில் விற்பனையாகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.240 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,345-க்கும், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.322 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,458-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடுமையாகச் சரிந்துள்ளதால், ஒரு கிராமிற்கு ரூ.10 ஆயிரம் வரை தங்க நகைக்கடன் வழங்கிய நிறுவனங்கள் அதிரடியாகக் குறைத்துவிட்டன. ஒரு கிராமிற்கு ரூ.9,300 என்கிற அளவில் ஒரு காலத்தில் இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எஸ்பிஐ வங்கி போன்றவை வழங்கின. அக்ரி லோனுக்கு இந்த அளவிற்கு ஒரு கிராம் தங்க நகைக்கடன் கிடைத்தது.

ஒரு கிராம் ரூ.6,800

ஆனால், இந்தியன் வங்கியில் இன்று (நவம்பர் 25) விசாரித்தபோது, தங்க நகைக்கடன் ஒரு கிராமிற்கு ரூ.8,300 ஆக இருந்தது. இந்த ஒரு கிராமிற்கு ரூ.8,300 என்பது அக்ரி லோனுக்கு மட்டும்தான். அதாவது, விவசாயிகளுக்கான தங்க நகைக்கடன்தான் இந்தத் தொகையில் கிடைக்கிறது. இதற்கான வட்டி விகிதம் 9.1 என்கிற அளவில் இருப்பதைக் காண முடிந்தது.

அதேபோல், எம்எஸ்எம்இ எனப்படும் வணிகர்களுக்கான தங்க நகைக்கடனுக்கும் ஒரு கிராமிற்கு ரூ.8,300 வழங்குகிறார்கள். ஆனால், மாதச் சம்பளம் வாங்குவோர் மற்றும் கூலி வேலை செய்வோர் வாங்கும் ரீடைல் தங்க நகைக்கடன் என்பது ஒரு கிராமிற்கு ரூ.6,800 ஆகவே இருந்தது. தினமும் இந்தத் தொகை குறைந்து வருவதாக அப்ரைசர்கள் கூறினார்கள்.

நகைக்கடன் நோட்டீஸ்

அப்ரைசர்கள் ஒரு பட்டியலை வைத்துத் தொடர்ந்து டிக் போட்டுக்கொண்டே இருந்தார்கள். என்ன சார் என்று விசாரித்தபோது, இவை எல்லாம் நகைக்கடன் வாங்கியவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டிய பட்டியல் என்றார்கள். நகைக்கடனுக்கு உடனே வட்டி, அசலைக் கட்டுமாறு போனில் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அண்மையில்தான் நோட்டீஸ் வரும் என்று கூறியிருந்தோம். அது நடந்துகொண்டிருப்பதைக் காண முடிந்தது.

நகைக்கடன் முழுமையாக வாங்கியவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். அதாவது, நகையின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வாங்கியவர்கள், நகைக்கடன் தவணைத் தேதி முடிந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி நடப்பதைப் பார்க்க முடிந்தது. மக்களே, நகைக்கடன் வாங்கியிருந்தீர்கள் என்றால், அதுவும் தவணைக் காலம் முடிகிறது என்றால், பழைய ரேட்டில் கடன் கிடைக்காது. எனவே, அதற்குத் தயாராக இருங்கள். இந்தியன் வங்கியில் மட்டுமல்ல, எல்லா வங்கிகளிலுமே தங்க நகைக்கடன் விகிதம் கடுமையாகக் குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+