"தமிழ் மீட்பு இயக்கம்".. அரசியலுக்கு ‘குட்பை’ சொன்ன ராமதாஸ் புதிய அமைப்பு தொடக்கம்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதையடுத்து தற்போது அவர் 'தமிழ் மீட்பு இயக்கம்' என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் 'தமிழ் மீட்பு இயக்கம்' என்ற புதிய அமைப்பை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார்.
பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

Ramadoss

'' 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்பது, இன்று வரையிலும் தமிழ்நாட்டில் ஒரு வெற்று முழக்கமாகவே இருந்து வருகிறது. 'இயன்றவரை இனியதமிழ்!' என்பதும் எள்ளளவும் எடுபடவில்லை. தமிழில் உரையாடுகையிலும் ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளின் கலப்படம், தமிழ்நாட்டின் சிற்றூர் மக்கள் வரை ஊடுருவிப் பாய்ந்து பெருகிக் கொண்டிருக்கிறது.

பயிற்று மொழி, இறை வழிபாடு, பண்பாட்டு நிகழ்வுகள், நீதிமன்ற வழக்கு ஆய்வுகள் என்றெல்லாம் நீளுகின்ற தமிழ்நாட்டின் பல்வேறு களங்களில், தமிழர்களின் தாய்மொழியான தமிழ், அதற்குரிய பயன்பாட்டில் இல்லை. கடைவீதிகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இடம்பெற வேண்டுமென அரசாணைகளும், அதை வலியுறுத்துகின்ற நீதிமன்ற கட்டளைகளும் கூட எத்தரப்பினராலும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையானது, உலகப் பெரும்பான்மை மக்களின் மொழிகளில் எவ்வொன்றுக்கும் நேர்ந்திடாத அவல நிலையாகும். இத்தகைய மொழி அழிவுப் போக்கானது, தமிழினத்தின் மீளமுடியாத வீழ்ச்சிக்கான உறுதியான சான்றாக இருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளில் தீவிரம் பெற்றுள்ள, இந்த அவல நிலையை மாற்ற தமிழறிஞர்களும், தமிழர்களும் பல்வேறு வகையில் பல்வேறு காலக் கட்டங்களில் போராடினர், இடையறாமல் போராடியும் வருகின்றனர்.

என்றாலும் கூட, உரிய அளவில் உயரிய முறையில், நமது தாய்த் தமிழ் மொழிக்கு வேண்டிய உரிமைகளின் அடிப்படையிலான மாற்றங்கள் ஏதும் பெரிதாக நிகழவில்லை. 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்று ஒரு பேதை உரைத்ததாக, தமிழ்த்தாய் சொல்வதுபோல், மகாகவி பாரதி எழுதியது போலத்தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.

எனவே. நமது நிகழ்காலத்தில் வேகமாக அழிவிற்குள்ளாகி வருகின்ற நமது தாய்த்தமிழை மீட்கவும், தமிழ் என்கிற நமது மொழியைத் தமிழர் வாழ்வியலின் பயன்பாட்டு மொழியாக மாற்றவும் நாம் தொடர்ந்தும், கூடுதல் வலிமையோடும் உறுதியாகப் போராடியாக வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+