சென்னையில் நர்ஸ் வேலைவாய்ப்பு.. 130 காலியிடங்கள்! விண்ணப்பிக்க ரெடியா?
சென்னை: சென்னை மாநகராட்சியில் 130 நர்சிங் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நர்சிங் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்காலம். பணியிடங்கள் குறித்த விவரங்கள், எப்படி விண்ணப்பிப்பது? போன்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனை மையங்களில் காலியாக உள்ள நர்ஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர நலசங்கத்தின் கீழ் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நர்ஸ் பணியிடங்கள்
சென்னை மாநகர நல சங்கம் மூலம், இயக்குநர் - மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் மற்றும் இயக்குநர் -மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தை பராமரிப்பு மையங்களில், தேசிய நலவாழ்வுக் குழும விதிமுறைகளின்படி ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக செவிலியர் பணியிடங்களில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி என்ன?
மொத்தம் 130 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு செவிலியர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு அங்கீராகம் பெற்ற செவிலியர் கல்லூரிகளில் பயின்ற செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். நர்சிங் கவுன்சில் பதிவு செய்து இருப்பது அவசியம்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணப்பிகலாம். விண்ணப்ப படிவங்கள் காலியிடங்கள் விவரம் தேசிய நலவாழ்வு குழுமம் (https://nhm.tn.gov.in/) மற்றும் பெருநகர சென்னை மாநராட்சி (www.chennaicorporation. gov.in) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சுய கையொப்பமிட்ட தகுந்த ஆவண நகல்களுடன் கீழே குறிப்பிட்ட முகவரியில் 07.12.2026 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாநகர நல அலுவலர் / உறுப்பினர் செயலர்,
சென்னை மாநகர நல சங்கம்,
பொது சுகாதாரத்துறை, ரிப்பன் கட்டிடம்,
3ஆம் தளம், அம்மா மாளிகை,
EVR பெரியார் சாலை, சென்னை-600 003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாநகர நல அலுவலர்/ உறுப்பினர் செயலர் அலுவலகத்தில் 07.12.2026 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு அறிவிப்பை படிக்க: Click Here


Click it and Unblock the Notifications
