கோச்சிக்கிட்டு அம்மா ஆபீஸ் போன மனைவி.. பின்னாடியே சென்று வாயிலேயே வெட்டிய வேலூர் ஆவின் டிரைவர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரில் தன்னுடைய அம்மாவுடன் ஆபீசுக்கு சென்ற பெண்ணை, அங்கேயே அவரது கணவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... மகளை காப்பாற்ற சென்ற அவரது அம்மாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியியில் உள்ளோரை பதற வைத்துவிட்டது.. இந்த கொடூரத்துக்கு என்ன காரணம்?

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் ஆவின் பாலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கீர்த்திகா என்ற பெண்ணை காதலித்தார்.. அந்த பெண்ணையே 8 வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார்.. இப்போது கீர்த்திகாவுக்கு 27 வயதாகிறது.. இப்போது இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

Aavin Driver Murder Case

ஆவின் பூத் டிரைவர்

இவர்களின் குடும்ப வாழ்க்கை சீராகவே போய் கொண்டிருந்தது.. ஆனால், கடந்த சமீப காலமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது... குறிப்பாக கீர்த்திகாவின் நடத்தையில் ஹரிபிரசாத்துக்கு வந்தேகம் வந்துள்ளது.. இதுதொடர்பாக மனைவியிடம் அடிக்கடி சண்டையும் போட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த பிரச்சினை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரிதாகியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஹரிபிரசாத், மனைவி கீர்த்திகாவை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்ட கீர்த்திகா, தனது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்.. கீர்த்திகாவின் அம்மா, சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலை அருகிலுள்ள ஒரு திருமண தகவல் மையத்தில் வேலை பார்த்து வருகிறாராம்.

வேலூர் கீர்த்திகா தம்பதி

இன்று காலையில் வேலைக்கு சென்ற கீர்த்திகாவின் தாயார், மகளையும் தன்னுடன் அழைத்து அலுவலகத்துக்கு சென்றிருக்கிறதார்.. வீட்டில் இருந்தால் மீண்டும் கணவருடன் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் மகளை தன்னுடன் அழைத்து சென்றாராம்..

ஆனால், கீர்த்திகா இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்ட ஹரிபிரசாத், அரிவாளுடன் அங்கு சென்றுள்ளார். இன்று மதியம் 12 மணியளவில் திருமண தகவல் மையத்துக்குள் நுழைந்த அவர், மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் கீர்த்திகா நிலைகுலைந்துள்ளார்.

அரிவாளாலேயே மனைவியை வெட்டி..

அரிவாள் வெட்டிலிருந்து தப்பிக்க 2 கைகளையும் வைத்து தடுத்துள்ளார். ஆனாலும் ஹரிபிரசாத் தொடர்ந்து வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் கீர்த்திகாவின் 2 கைகளும் துண்டானதாகவும், கழுத்து மற்றும் வாய் பகுதிகளிலும் பலத்த அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.. இதில் கீர்த்திகா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகளின் அலறல் சத்தம் கேட்டு அவரைக் காப்பாற்ற ஓடிவந்த தாயாரையும் ஹரிபிரசாத் வெட்டியுள்ளார். இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹரிபிரசாத் நேராக சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்து விட்டார்.. மனைவியின் நடத்தை பிடிக்கவில்லை என்பதால், வெட்டி கொன்றேன் என்று போலீசில் சொல்லியுள்ளார்..

நடத்தையில் சந்தேகம்

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கீர்த்திகாவின் உடலை மீட்டு போஸ்ட்டம் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த கீர்த்திகா அம்மாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹரிபிரசாத்தைக் கைது செய்த போலீஸார், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்... மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது முதல் குடும்பத்தில் நடந்த பிரச்சினைகள் வரை, இந்தக் கொலைக்கான பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. 2 குழந்தைகளின் தாயான பெண், தனது தாயின் அலுவலகத்திலேயே கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+