வேலூர் குடியாத்தம் பாமக பிரமுகர் சுட்டுக்கொலை .. தப்பியோடிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாமக பிரமுகர் ஞானவேலு என்பவர் முன்விரோதத்தில் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் காயமடைந்திருந்தார். இந்த சூழலில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பூவரசன் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ஞானவேலு என்பவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பாமக பிரமுகர் ஞானவேலுவுக்கும், பூவரசனுக்கும் நேற்று மாலை வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பூவரசன் தன்னிடம் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியால் ஞானவேலுவைச் சுட்டதாக சொல்லப்படுகிறது.

Gudiyatham crime PMK

இதில் ஞானவேலுவும், அவருடன் இருந்த நண்பர் ரகு என்பவரும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஞானவேலு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் ரகு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஞானவேலுவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பூவரசனை போலீசார் தேடி வந்தனர். பூவரசன் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்பகிறது. இதையடுத்து பூவரசன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் பிடித்துள்ளனர். இதில் காயமடைந்த பூவரசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இச்சம்பவத்தில் பூவரசனால் தாக்கப்பட்டதாக கூறப்படும் போலீஸ்காரர் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலையும் ஒரு சம்பவம்

கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் 26 வயதாகும் ரவுடி பிரிதிவிராஜ் என்பவர் பீர் பாட்டிலால் தீபாவளி அன்று குத்திக்கொல்லப்பட்டார். மது அருந்தும்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ரவுடி அருளரசு அவரது தம்பி அன்பரசன் இணைந்து இக்கொலையை செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி அருளரசு என்பவரை கடலூர் போலீசார் நேற்று அதிகாலை சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ஒரு குற்றம்சாட்டப்பட்டவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+